பொது செய்தி

தமிழ்நாடு

காப்பீடு செய்த விவசாயிகளுக்குஇழப்பீடு தராமல் இழுத்தடிப்பு

Added : பிப் 15, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்ராமநாதபுரம் மாவட்டத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தராமல் இழுத்தடிப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

மாவட்டத்தில் 2018-19ல் 1 லட்சத்து 6,984 விவசாயிகள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 67 எக்டேரில் நெல், சிறு தானியங்கள், பருத்தி,எண்ணெய் வித்து பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளனர். இதில் 178.17 கோடி ரூபாய் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் 187 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்குமட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 217 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்குஇது வரை இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. காப்பீடு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும்உரிய இழப்பீடு வழங்குவதில் தாமதம் செய்கின்றன. இதனால்விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மதுரை வீரன் கூறுகையில், ''விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ததில் 187 கிராம விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப் படுகிறது. 217 கிராமங்களுக்குஇழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். தாமதமின்றி உடனடியாக இழப்பீடு வழங்கவேண்டும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X