பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இளைஞர்கள்

Added : பிப் 15, 2020
Advertisement
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இளைஞர்கள்

ராமநாதபுரம்:வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு களில் குடிநீருக்காக கிராமங்களில் பல கி.மீ., அலைந்து பரிதவித்தனர்.

இந்தாண்டு பருவமழையால் நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.இதனை பாதுகாத்து மரங்களை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் ராமநாதபுரம் அருகே எஸ்.கொடிக்குளம் கிராமத்து இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

வணிக வரித்துறையில் பணியாற்றும் வீரக்குமார், ராமநாதபுரம் தனியார் பள்ளியில் டிரைவாக பணிபுரியும் கருணாகரன் ஆகியோர் கிராமத்து இளைஞர்களை ஒருங்கிணைத்து மாதம் ஒரு நாளில் கண்மாய் கரைகள், ஊரணி கரைகளில் மரங்களை நட்டு பாதுகாக்கின்றனர். நீர் நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும் செய்கின்றனர்.

இங்குள்ள ஆலடி கருப்பசாமி கோயில், பஞ்சனேந்தல் காளி, வாழவந்தாள் அம்மன் கோயில், வீரப்பெருமாள் கோயில் பகுதிகளில் துப்புரவு பணியையும் செய்கின்றனர். இவர்களின் நோக்கம், சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை நட்டு தங்கள் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும், என்பது தான்.

செலவுகளை நன்கொடையாளர்களிடம் பெற்றுக் கொள்கின்றனர். கிராம வளர்ச்சிக்காக வெளி நாடுகளில் பணியாற்றுபவர்கள் தாராளமாக நிதியுதவி வழங்குகின்றனர். எஸ்.கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த சரவணக்குமார் கூறுகையில், 'கிராமப்புற இளைஞர்களை நல்வழிப் படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் மரக்கன்றுகள் நடுதல், கோயில்களை சுத்தம் செய்யும் பணிகளை செய்கிறோம். எங்களுக்கு வழிகாட்டியாக வீரக்குமார், கருணாகரன் செயல்படுகின்றனர், என்றார்.

இவர்களை பாராட்ட.. 97902 43817.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X