பொது செய்தி

தமிழ்நாடு

பட்ஜெட்டிற்கு விவசாயிகள், பொது மக்கள் வரவேற்பு

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020
Advertisement

ராமநாதபுரம்:தமிழக அரசின் 2020-21க்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான பன்னீர் செல்வம் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்திற்கு ரூ.3,041 கோடி ஒதுக்கீடு, காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு 700 கொடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் சுற்றுலா வசதியை மேம்படுத்த ரூ.9.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டிற்கு விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

அவர்களின் கருத்துக்கள்.

வரவேற்கத்தக்க திட்டங்கள்

பா. மாரி, 60, செயற்பொறியாளர் ஓய்வு, ராமநாதபுரம்: கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு மூவாயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலாடி பகுதியில் மக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர். கடல் நீரை குடிநீராக்கும் குதிரை மொழி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். ராமநாதபுரம் மாவட்ட மக்களின் பல ஆண்டு கோரிக்கையான மருத்துவக்கல்லுாரி கிடைத்திருக்கிறது. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் வரவேற்ககூடிய அளவுக்கு திட்டங்கள் இருக்கின்றன.

கண்துடைப்பு பட்ஜெட்

ரா. சேகர் 55, தொழிலதிபர், ராமநாதபுரம்: அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் வெறும் கண்துடைப்பு போல தெரிகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்காக அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களும் சரியான அளவில் மக்களிடம் போய் சேரவில்லை. இந்த கவர்ச்சி பட்ஜெட் மக்களை எந்த அளவிற்கு ஈர்க்க போகிறது என்பதை இனிவரும் தேர்தல்களில் தான் தெரிந்து கொள்ள முடியும்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்

ஏ.ஜி.ராகவி நிவேத்யா, குடும்பத்தலைவி, பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கடை கோடியில் உள்ள ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி வருவது ஏழை, எளிய மக்கள் மருத்துவம் பார்க்க வசதியாக இருக்கும்.
காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பின் தங்கிய மாவட்டமாக உள்ள ராமநாதபுரம் வளர்ச்சியடையும் என்பதில் ஐயமில்லை.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்
எஸ்.டி.சுரேஷ்குமார், சமூக ஆர்வலர், துரைச்சாமிபுரம், சாயல்குடி: தமிழக பட்ஜெட்டில்
ராமநாதபுரம் மற்றும் விழுப்புரத்தில் ரூ.3,041 கோடிக்கு கடல் நீரை குடி நீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது வரவேற்கத்தக்கது. சாயல்குடி அருகே நரிப்பையூரில் முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு
வந்தால் 292 கிராம மக்களின் குடிநீர் பிரச்னையைதீர்க்க உதவும். வறட்சி காலங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் கிராமங்களை முறையாக கணக்கிட்டு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து குடிநீர் வழங்கினால் இத்திட்டம் வரப்பிரசாதமாக அமையும்.

விவசாயிகளுக்கு சலுகை



மகாலிங்கம், விவசாயி, தோட்ட மங்கலம், திருவா டானை: விவசாயிகளுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நீரை சிக்கனமாக பயன்படுத்தும் திருந்திய நெல் சாகுபடியை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்துவது, 11.1 லட்சம் ஏக்கருக்கு நெல்விதைப்பு முறை நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்திற்கு விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.இதனால் விவசாயிகள் பயன்பெறும் விதமாக உள்ளது. ஏற்கனவே உழவு மானியம்மூலம் விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கூடுதல் பயன் தரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X