சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோயில் அருகே வெடிகுண்டு போன்ற பொருளால் பரபரப்பு 

Added : பிப் 15, 2020
Advertisement

முதுகுளத்துார்:முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் முனியன் கோயில் திருவிழா நடக்க இருப்பதால் கிராமத்தினர் துப்பரவு பணியில் ஈடுபட்டடனர். அப்போது கோயில் அருகே உள்ள காலியிடத்தை சுத்தம் செய்த போது ஐஸ்கிரீம் டப்பாவில் திரி போட்ட நாட்டு வெடிகுண்டு போன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

முதுகுளத்துார் போலீசார் ஆய்வு செய்த போது டப்பாவில் வெடி மருந்து, சிறிய கற்கள் அடைக்கப்பட்டு திரி இருந்துள்ளது. இதனை போலீசார் நாட்டு வெடிகுண்டு இல்லை எனக்கூறி அதனை தண்ணீரில் போட்டு கரைத்தனர். எனவே திருவிழா நடக்க உள்ள நிலையில் இது போன்று சம்பவம் நடந்ததால் இப்பகுதியில் மோப்ப நாய்,வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

போலீசார் கூறுகையில், திருவிழாவிற்கு பயன்படுத்தகூடிய பழைய வெடி தான் என்று உறுதி செய்தனர்.பின்பு வெடி மருந்தை தண்ணீரில் கரைக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் அச்சப்பட தேவையில்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X