பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை:முதுகுளத்தூர் ஒன்றிய கூட்டத்தில் முடிவு

Added : பிப் 15, 2020
Advertisement

முதுகுளத்துார்:காவிரி குடிநீர் கிராமங்களில் தங்கு தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய தலைவர் தர்மர் கூறினார்.

முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய தலைவர் தர்மர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கண்ணகி, மாவட்ட கவுன்சிலர் கோவிந்தம்மாள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ஆணையாளர் சாவித்திரி வரவேற்றார்.

கிராமங்களில் காவிரி குடிநீர் தடையின்றி கிடைக்கவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும்,பேவர் பிளாக் சாலை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின் கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது.

நாகஜோதி: சாம்பக்குளம் இந்திரா நகர் காலனியில் காவிரி குடிநீர் வருவதில்லை.

லெட்சுமி: கடந்த ஆண்டில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயீர் காப்பீடு வழங்க வேண்டும். கீழத்துாவல் பகுதி கிராமங்களில் சாலையை சீரமைக்கவும், கண்மாய்களை துார் வார வேண்டும்.

கலைச்செல்வி: வெங்கலக்குறிச்சி கிராமத்தில் ரேஷன் கடை அமைக்கவும், விளங்குளத்துார் ஊராட்சியில் அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

அர்ஜூனன்: செங்கற்படை கிராமத்திற்கு ஆர்.ஓ பிளான்ட் அமைக்கவும், கிராமங்களில் மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை நேரங்களில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

ராஜலெட்சுமி:உடைகுளம்,சூரங்குளம் கண்மாயில் படித்துறை அமைக்கவும், ஒன்றியத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

முருகன்: மேல பண்ணைக்குளத்தில் போர்வெல் வசதியுடன் குடிநீர் தொட்டி அமைக்கவும், ஆனைசேரியில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

கோதண்டன்: தேரிருவேலியில் இரண்டு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கவும்,தெருக்களில் கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், சின்ன கண்மாயில் கருவேல் மரங்களை அகற்ற வேண்டும்.

சாத்தையா: பனையடியேந்தல், கருநாடான் கிராமங்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி குடிநீர் வரவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

தலைவர்: அனைவரின் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் ஆய்வு செய்ய அதிகாரிகளை உத்தரவுவிட்டார். வெண்ணீர் வாய்க்கால் அரசு நடுநிலைப்பள்ளியில் 3 ஆண்டாக நிறுத்தப்பட்டுள்ள பணியை உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதுகுளத்துார் ஒன்றியத்தில் அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும், என்றார். பி.டி.ஓ., மங்களேஸ்வரி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X