நகராட்சியில் தொடரும் முறைகேடுகள் வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020
Advertisement
 நகராட்சியில் தொடரும் முறைகேடுகள் வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

விருதுநகர்:விருதுநகர் பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் எதையும் கண்டுக்காத வேடிக்கை பார்ப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுவாக நகராட்சிகளில் அவசர கூட்டம், சாதாரண கூட்டம், வேண்டுகோள் கூட்டம் நடத்தி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். தற்போது கவுன்சிலர்கள் இல்லாததால் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஒரு வெளிப்படை தன்மை இருப்பதில்லை. ரகசியமாக நடக்கும் இந்த தீர்மானங்களால் வசூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

30வது வார்டு பி.பி.,வையாபுரி நந்தவனம் தெருவில் நகராட்சியின் சுகாதார வளாகம் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்தது. கட்டடம் சேதமடைய துவங்கியதும் நகராட்சி நிர்வாகம் சுகாதார வளாகத்தை இடித்தது. அப்பகுதியினர் ரேஷன் கடை அமைக்கும்படி கோரினர் இதற்கு எம்.பி.,மாணிக்கம் தாகூர் தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்க ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் அந்த காலியிடத்தை தனிநபருக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. முறைப்படி டெண்டர் அறிவிக்காமல் குத்தகை நடந்துள்ளது.இதையடுத்து கடந்த வாரம் அந்த காலியிடத்தில் தனிநபர் வீடு கட்ட வானம் தோண்ட ஆரம்பித்தனர். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தும் பணிகள் தொடர்ந்தன. நகராட்சி அமைப்புகளின் இயக்குனரகத்திற்கு புகார் சென்றவுடன் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இதனிடையே காலியிடங்களை குத்தகைக்கு விட நகராட்சி நிர்வாகம் டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பி.பி. வையாபுரி நந்தவனம் தெரு காலியிடமும் அடங்கும். இதற்கு உயர் அதிகாரிகள் முதல் ஆளும் கட்சியினர் வரை உடைந்தையாக உள்ளதாகவும்,இதை மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்ப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகளால் சாமானிய வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் பொல்லாப்பை பெறாமல் பி.பி. வையாபுரி நந்தவனம் தெரு காலி இடத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக ரேஷன் கடை அமைக்க முன்வர வேண்டும். இது தொடர்பாக பதில் பெற நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியை பலமுறை அழைத்தும் அவர் பதிலளிக்கவில்லை.

கமிஷனர் உடந்தை

இப்பிரச்னை குறித்து கமிஷனரிடம் மனு அளிக்க சென்றோம். எங்கள் மனுவை வாங்கவில்லை. அதை பற்றி பேச வேண்டாம் என கூறிவிட்டார். தனிநபர் ஒருவருக்காக பொதுமக்களின் தேவைகளை புறக்கணிப்பது எவ்விதத்தில் நியாயம். டெண்டர் அறிவிப்பு வரும் முன்னரே தனிநபர் ஏன் வானம் தோண்ட ஆரம்பித்தார். உண்மையை நகராட்சி அதிகாரிகள் தான் கூற வேண்டும்.
-பேபி, முன்னாள் கவுன்சிலர்,விருதுநகர்


கோயிலை இடித்த கமிஷனர்

தற்போது குத்தகை வாங்கியிருக்கும் இந்த தனிநபருக்காக தான் வாறுகால் அடைக்கிறது என்பதற்காக தெருவின் ஓரத்தில் இருந்த காளியம்மன் கோயிலை ஆக்கிரமிப்பு என கூறி கமிஷனர் அகற்றினார். கிட்டதட்ட அக்கோயில் 52 ஆண்டாக இதே பகுதியில் தான் இருந்து வருகிறது. மக்களின் நம்பிக்கை ஏய்த்து தனிநபருக்கு சாதகமாக செயல்படுவது நியாயமல்ல.
-கண்ணன், வியாபாரி, விருதுநகர்.

வேண்டுமென்றே நிராகரிக்கிறது

ரேஷன் கடை தனியார் கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. அதை நகராட்சி
கட்டடத்தில் இயங்க வைத்தால் பொதுமக்களுக்கும் உதவியாக இருக்கும். நகராட்சிக்கும்
வருமானம் கிடைக்கும். நகராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே பொதுமக்களின் கோரிக்கையை நிராகரிக்கிறது.
-சவரிராஜ், காஸ் ஊழியர், விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X