டென்னிஸ்; திறமையை நிரூபித்த வீரர்கள்

Added : பிப் 15, 2020
Advertisement

கோவை:மாநில அளவிலான 'நான் ரேங்கிங்' டென்னிஸ் போட்டியில், வீரர்கள் தங்களின் முழு திறமையும் வெளிப்படுத்தி அசத்தினர்.கோவை, லிவோ ஸ்போர்ட்ஸ் நடத்தும், 'நான் ரேங்கிங் டென்னிஸ்' காளப்பட்டி ரோடு, லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப் டென்னிஸ் கோர்ட்டில் நடந்தது. வீரர்களுக்கான, 'ரெட் பால் மினி கோர்ட்', 8, 10, 12, 14, 16, 21 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில், போட்டிகள் நடந்தன.கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், கரூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.* 'ரெட்பால் மினி கோர்ட்டில்' நடந்த போட்டியில், மஹதிராஜா, 15-10 என்ற புள்ளி கணக்கில், ஸ்ரீ கிருஷ்ணாவை வென்றார்.* எட்டு வயது பிரிவு இறுதிப்போட்டியில், ரோனி, 6-0 என்ற புள்ளி கணக்கில், பவன்ராஜையும்; பத்து வயதுக்கு உட்பட்ட பிரிவு இறுதிப்போட்டியில், ரோனி, 6-2 என்ற புள்ளி கணக்கில், மித்ரவிந்தாவையும் வென்றனர்.* 12 வயது பிரிவு இறுதிப்போட்டியில் ரோகித், 6-2 என்ற புள்ளி கணக்கில், சரவணனையும்; 14 வயதுக்கு உட்பட்ட பிரிவு இறுதிப்போட்டியில், ஜெய்சரண், 6-2 என்ற புள்ளி கணக்கில், நிகிலேஸ்வர ராமையும் வென்றனர்.* 16 வயது பிரிவில் இறுதிப்போட்டியில், ஜெய்சரண், 7-6 என்ற புள்ளி கணக்கில், பாலா சூர்யாவையும்; ஆண்கள் பிரிவில் லிக்கித், 6-4 என்ற புள்ளி கணக்கில், நிரன்ஜேஸ்வர ராமையும் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கோப்பைகள் வழங்கி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X