இந்தியா

கடலோர மண்டல மேலாண்மை தன்னாட்சி...அமைப்பு!உலக வங்கி ரூ.112 கோடி வழங்கி ஒப்புதல்

Added : பிப் 15, 2020
Advertisement
  கடலோர மண்டல மேலாண்மை தன்னாட்சி...அமைப்பு!உலக வங்கி ரூ.112 கோடி வழங்கி ஒப்புதல்

புதுச்சேரி:புதுச்சேரி மாநிலத்தில் ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மை தன்னாட்சி அமைப்பு தோற்றுவிப்பதற்கானபூர்வாங்க பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடலோர பகுதியில் உள்ள ஈரப்பத நிலங்களை பாதுகாப்பது,கடல்நீர் மாசுபடுவதை தடுப்பது போன்றவற்றை கண்காணிக்கும் வகையில் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த தேசிய கடலோர மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கடலோர பகுதிகளில் வசிக்கும் 15 லட்சம் பேர் நேரடியாகவும், 6 கோடி பேர் மறைமுகமாகவும் பயனடைய உள்ளனர்.

இத்திட்டத்தின்படி புதுச்சேரி மாநிலத்தில் ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மை தன்னாட்சி அமைப்பு தோற்றுவிப்பதற்கான பூர்வாங்க பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி காரைக்கால், மாகி, ஏனாமில் மொத்தம் 45 கி.மீ., தொலைவிற்கு கடற்கரை உள்ளது. 1,000 சதுர கி.மீ., பரப்பளவிற்கு மீன்பிடி தொழிலும் நடந்து வருகிறது. இப்பகுதிகளை ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மை தன்னாட்சி அமைப்பு இனி கண்காணிக்கும்.

இந்த அமைப்பில் மீன்வளத் துறை, சுற்றுலாத் துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை மற்றும் வனத்துறையினர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அறிவியல் தொழில்நுட்ப துறை கண்காணிப்பு மற்றும் செயலாக்க துறையாக செயல்பட உள்ளது.இந்த துறைகள் தனித்தனியே தங்களுடைய கடலோரம் சார்ந்த மேலாண்மை திட்டத்தை தற்போது ஒப்புதல் பெற சமர்ப்பித்துள்ளன.அதில், மீனவர் நலத் துறை காரைக்காலில் பயிற்சிக் கூடம் ஆரம்பிப்பதற்கும், ஆய்வகம், உள்ளிட்ட திட்டங்களையும், தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் முகத்துவாரத்தில் துார் வாருதல் திட்டத்தையும் சமர்பித்துள்ளது.

வனத்துறை மாங்குரோவ் காடுகள் பாதுகாக்கவும், பொதுப்பணித் துறை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்திட திட்ட அறிக்கை சமர்பித்துள்ளன.இந்த திட்டங்களை செயல்படுத்த உலக வங்கியும் 112 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளது.பாதுகாக்கப்பட்ட கடலோர பகுதியில் தாறுமாறாக கட்டுமானப்பணிகள் மேற்கொள்வதை முறைப்படுத்த ஏற்கனவே கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது, கடலோர மண்டலங்களை மேலாண்மை செய்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X