சி டிவிஷன் கால்பந்து போட்டி கே.ஆர்.வி., கோல் மழை| Dinamalar

'சி' டிவிஷன் கால்பந்து போட்டி கே.ஆர்.வி., 'கோல் மழை'

Added : பிப் 15, 2020
Share

கோவை,:'மாவட்ட அளவிலான 'சி' டிவிஷன் கால்பந்து 'லீக்' போட்டியில், கே. ஆர்.வி., அணி 6-0 என்ற கோல் கணக்கில், வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கால்பந்து சங்கம் கீழ், 'ஏ', 'பி', 'சி' என மூன்று டிவிஷன் உள்ளன. 'சி' டிவிஷனில், 11 அணிகள் இடம் பிடித்துள்ளன. சுங்கம், கார்மல் கார்டன் பள்ளியில் நடந்த, 'சி' டிவிஷன் 'லீக்' போட்டியில், கே.ஆர்.வி., அணி, யூ.ஆர்.சி., அணிகள் மோதின. போட்டி துவங்கியது முதலே, இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய, கே.ஆர்.வி., அணி, 7, 13, 15வது நிமிடங்களில் கோல் அடித்து, அசத்தினர். முதல் பாதியின் முடிவில், கே.ஆர்.வி., அணி மூன்று கோல் முன்னிலை வகித்தது.இரண்டாம் பாதியில், 33, 36, 49வது நிமிடத்தில் கே.ஆர்.வி., அணி வீரர்கள் கோல் அடித்து, அமர்க்களப்படுத்தினர்.ஆட்ட நேர முடிவில், கே.ஆர்.வி., அணி, 6-0 என்ற கோல் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X