இந்தியா

எலி பேஸ்ட் சாப்பிட்ட இளம் பெண் பலி

Added : பிப் 15, 2020
Advertisement

புதுச்சேரி:பெற்றோரை மிரட்ட எலி பேஸ்ட் சாப்பிட்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

லாஸ்பேட்டை, புதுப்பேட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராஜா,58; இவரது மனைவி முத்துவள்ளி,54; இவர்களுக்கு ராஜேஸ்வரி, 24 , ஜெயமேரி 19 என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.ராஜேஸ்வரி திருமணமாகி லாஸ்பேட்டையில் கணவருடன் வசித்து வருகிறார். ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இளைய மகள் ஜெயமேரி புதுசாரத்தில் மிக்சர் கம்பெனியில் வேலை செய்து வந்த இவர், கடந்த சில தினங்களாக வீட்டு வேலையை செய்யவில்லை.

இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர்.இதனால், பெற்றோரை மிரட்டுவதற்காக கடந்த 8ம் தேதி மாலை 3.00 மணியளவில் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். திடுக்கிட்ட குடும்பத்தார், உடன் அவரை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X