இந்தியா

குற்றச்சாட்டுகளுக்கு பதில் தர கால அவகாசம் தேவை : சபாநாயகரிடம் காங்., எம்.எல்.ஏ., தனவேலு கடிதம்

Added : பிப் 15, 2020
Advertisement

புதுச்சேரி:தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் தர, கால அவகாசம் வேண்டும் என, சபாநாயகர் சிவகொழுந்துவை சந்தித்து, காங்., எம்.எல்.ஏ., தனவேலு கடிதம் அளித்தார்.

பாகூர் தொகுதி எம்.எல்.ஏ., தனவேலு. காங்., கட்சியை சேர்ந்த இவர், பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். தொடர்ந்து, கவர்னரை சந்தித்து ஆட்சியாளர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். ஆளும் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் மக்களை திரட்டி பேரணி நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால், காங்., கட்சியில் இருந்து தனவேலு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவர் வகித்து வந்த பாப்ஸ்கோ வாரிய தலைவர் பதவியும் பறிக்கப் பட்டது.தனவேலுவின் அரசுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்ததால், அவரை, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ., பதவியை பறிக்க வேண்டும் என, அரசு கொறடா அனந்தராமன், காங்., எம்.எல்.ஏ.,க்களுடன் சென்று, சபாநாயகர் சிவக் கொழுந்துவிடம் மனு அளித்தார்.

அந்த மனுவின் அடிப்படையில், 'ஏன் உங்களை பதவியில் இருந்து நீக்கக்கூடாது, இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்' என, சபாநாயகர் கடந்த 6 ம் தேதி தனவேலு எம்.எல்.ஏ., வுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.இந்நிலையில், சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு பதில் கொடுக்க நேற்று கடைசி நாள் என்பதால் வழக்கறிஞர்களுடன் சட்டசபைக்கு வந்த தனவேலு, சபாநாயகரை சந்தித்தார்.

'என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க இரு வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டு, கடிதம் அளித்தார். கடிதத்தை பெற்ற சபாநாயகர், ஆலோ சித்து பதில் கூறுவதாக தெரிவித்தார்.பதவியை பறிக்க முயற்சிதனவேலு எம்.எல்.ஏ., கூறுகையில், புதுச்சேரி வளர்ச்சிக்காகவும், ஆளும் அரசு மீது பொதுமக்கள் கூறி வரும் ஊழல் குற்றச்சாட்டுகளால் கட்சியின் பெயர் கெட்டு விடக்கூடாது,

2021ல் தேர்தலில் காங்., வேட்பாளர்கள் தோல்வி அடைந்து விட கூடாது என்பதற்காக, தவறுகளை சுட்டிக்காட்டினேன். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தெரிவித்தேன். ஆனால். என்னை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என சபாநாயகர் கேட்டுள்ளார்.அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுபவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். கட்சி மற்றும் முதல்வர், அமைச்சர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் தவறுகளை சுட்டிக் காட்டியது தவறா. ஆனால் அதை குற்றமாக கருதி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எனது எம்.எல்.ஏ., பதவியை பறிக்க முயற்சி நடக்கிறது.சட்டசபை சிறப்பு கூட்டம் நடத்துவதற்கு முன்பு அரசு கொறடா, அரசுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என எனக்கு கடிதம் கொடுத்தார். நான் அரசுக்கு எதிரானவன் இல்லை. 12ம் தேதி நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தில் காங்., கட்சிக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுள்ளேன். எனது மக்கள் பணி தொடரும் என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X