இந்தியா

புதுச்சேரியில் நாளை காங்., ஆர்ப்பாட்டம்

Added : பிப் 15, 2020
Advertisement

புதுச்சேரி:பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மத்திய பா.ஜ., அரசின் நடவடிக்கையை கண்டித்து, புதுச்சேரியில் காங்., சார்பில் நாளை (16ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதுகுறித்து காங்., மாநிலத் தலைவர் நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கை:

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் நலனை காத்திட இட ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்., அரசு, இடஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தி அவர்களின் உரிமைகளையும், சமூக நீதியையும் காத்து வந்தது. ஆனால், தற்போதைய மத்திய பா.ஜ., அரசு, பின்தங்கிய மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும், அவர்களின் உரிமையை பறிக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கூறிய தீர்ப்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, இட ஒதுக்கீடு கொள்கையை நீர்த்துப்போகும் செயலில் ஈடுபடும் பா.ஜ., அரசின் இச்செயல் கண்டிக்கத்தக்கது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யாமல் மெத்தனமாக இருப்பது சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது.

எனவே, இட ஒதுக்கீட்டை பறிக்கத் துடிக்கும் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசை கண்டித்து, புதுச்சேரி மாநில காங்., சார்பில் நாளை (16ம் தேதி) மாலை 5:00மணியளவில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.அகில இந்திய காங்., செயலர் சஞ்சய்தத், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர். இதில், புதுச்சேரி மாநில காங்., நிர்வாகிகள், அனைத்து பிரிவு தலைவர்கள், உறுப்பினர்கள் தொண்டர்கள்,பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X