மாவட்ட பூப்பந்து; எஸ்.என்.எஸ்., முதலிடம்| Dinamalar

மாவட்ட பூப்பந்து; எஸ்.என்.எஸ்., முதலிடம்

Added : பிப் 15, 2020
Share
கோவை:மாவட்ட அளவிலான 'கோவை டைஸ்' கூடைப்பந்து போட்டியில், குமரகுரு கல்லுாரி அணியும்; பூப்பந்து போட்டியில் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியும், முதலிடத்தை தட்டி சென்றன.சூலுார், ஆர்.வி.எஸ்., இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியின் சார்பில், 3ம் ஆண்டு மாவட்ட அளவில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான, 'கோவை டைஸ் - 2020' குழு போட்டிகள், கல்லுாரி மைதானத்தில் நடந்தன.மாணவிகளுக்கான,

கோவை:மாவட்ட அளவிலான 'கோவை டைஸ்' கூடைப்பந்து போட்டியில், குமரகுரு கல்லுாரி அணியும்; பூப்பந்து போட்டியில் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியும், முதலிடத்தை தட்டி சென்றன.சூலுார், ஆர்.வி.எஸ்., இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியின் சார்பில், 3ம் ஆண்டு மாவட்ட அளவில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான, 'கோவை டைஸ் - 2020' குழு போட்டிகள், கல்லுாரி மைதானத்தில் நடந்தன.மாணவிகளுக்கான, த்ரோபால், வாலிபால், கால்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து போட்டிகளில், 30 அணிகள் பங்கேற்றுள்ளன.கூடைப்பந்துஇறுதிப்போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 25-21 என்ற புள்ளி கணக்கில், இந்துஸ்தான் இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணியையும்; 3 மற்றும் 4ம் இடத்துக்கான போட்டியில், ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணி, 23-22 என்ற புள்ளி கணக்கில், ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணியையும் வென்றன.பூப்பந்துஇறுதிப்போட்டியில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணியையும்; 3ம் மற்றும் நான்காமிடத்துக்கான போட்டியில், ஸ்ரீராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், ஸ்ரீசக்தி கல்லுாரி அணியையும் வென்றது.வாலிபால்முதல் அரையிறுதிப் போட்டியில், ஸ்ரீஈஸ்வர் இன்ஜி., கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில், கே.சி.டி., கல்லுாரி அணியையும்; 2வது போட்டியில், ஜி.சி.டி., அணி, 2-1 என்ற செட் கணக்கில், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணியையும் வென்றன.த்ரோபால்இறுதிப்போட்டியில், கலைஞர் கருணாநிதி கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், நேரு தொழில்நுட்ப கல்லுாரி அணியையும்; 3ம் மற்றும் நான்காமிடத்துக்கான போட்டியில், ஜி.சி.டி., அணி, 2-0 என்ற செட் கணக்கில், ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணியையும் வென்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X