பொது செய்தி

இந்தியா

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் வரவேற்பு

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (5)
Advertisement
உச்சநீதிமன்ற#  உத்தரவு,தேர்தல் ,ஆணையம் வரவேற்பு #

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 'அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விபரங்களை, வலைதளங்களில் வெளியிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, தலைமை தேர்தல் ஆணையம் வரவேற்றுள்ளது.




மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், குற்றப் பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தது.அதன்படி, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை அறிவித்த, 48 மணி நேரத்திற்குள், அவர்களின் குற்றப் பின்னணி விபரங்களை, வலைதளம்,பத்திரிகை மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியிட வேண்டும். அத்துடன், குற்றப் பின்னணி உள்ளவர், வேட்பாளராக ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்பதையும் விளக்க வேண்டும்.இது குறித்து, தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை, ஆணையம் மனதார வரவேற்கிறது. இது, தேர்தல் ஜனநாயக முன்னேற்றத்திற்கு, புதிய அளவுகோல்களை உருவாக்க துணை புரியும். தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக, 2018அக்.,ல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'வேட்பாளர்கள், தங்கள் குற்றப் பின்னணி குறித்து, தேர்தல் பிரசார காலத்திற்குள், குறைந்தபட்சம் மூன்று முறை, டிவி மற்றும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது நடைமுறையில் உள்ளது.இதனுடன், உச்ச நீதிமன்றம் புதிதாக பிறப்பித்த உத்தரவுகளும், தேர்தல் விதிமுறைகளில் சேர்க்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
15-பிப்-202010:45:46 IST Report Abuse
நக்கீரன் இப்படி ஒருத்தனும் தங்களுடைய வேலைய செய்யாம அடுத்தவன் ( உச்சநீதிமன்றம் ) சொல்லித்தான் செய்யணும்ங்கிற நிலைமை இந்தியாவில இருக்கு. நாட்டை ஆள்பவர்கள் நல்லவர்களாக, நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. அதை இத்தனை வருடம் கழித்து இப்போது தான் தீர்ப்பிலேயே கொண்டு வர முடிந்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய கேவலம். இன்னும் நடைமுறைக்கு வர எத்தனை நாளாகுமோ? இப்படி போலியாக ஜனநாயகத்தை கட்டமைத்துக்கொண்டு ஒரு கூட்டம் சுகமாக வாழ்கிறது. அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. அடித்தட்டு மனிதன் அடி மேல் அடி வாங்கிக்கொண்டே இருக்க வேண்டியதுதானா? இதெல்லாம் என்றைக்கு மாறப்போகிறதோ தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
15-பிப்-202009:29:34 IST Report Abuse
GMM இந்திய தேர்தல் ஆணையதிற்கு நீதிமன்றம் போன்று அரசியல் அமைப்பு சட்டம் பொருந்தும். பள்ளி தலைமை ஆசிரியர் சிறந்த மாணவர்கள் உருவாக்க அதிகாரம் பெற்று இருக்க வேண்டும். போலி வாக்காளர், குற்ற பட்டியல் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தான் தடுக்க முடியும். மக்கள் நீதி மன்றம் நாடலாம். மன்னர் நாட வேண்டிய அவசியம் இல்லை. CAG அனைத்து அரசு நிதி பெரும் துறையை நீதித்துறை உட்பட தணிக்கை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Charles - Burnaby,கனடா
15-பிப்-202008:32:53 IST Report Abuse
Charles சீரமைப்புக்கு உதாரணமாக இந்த தீர்ப்பு அமைகிறது மக்களுடைய நல் மதிப்பை உச்ச நீதி மன்றம் பெற்றுள்ளது குற்றங்களுக்கு அரசியலில் ஒரு தங்க பதக்கமாக அல்லவா கொடுத்தார்கள் இதுவரையில்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X