பிஷப் அம்புரோஸ் விளையாட்டு விழா

Added : பிப் 15, 2020
Advertisement

கோவை:சுங்கம், புறவழிச்சாலையில் உள்ள பிஷப் அம்புரோஸ் கல்லுாரியில் நடந்த விளையாட்டு விழாவில், மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.பிஷப் அம்புரோஸ் கல்லுாரியின் மாணவ, மாணவிகளை விளையாட்டு துறையில் ஊக்கப்படுத்தும் விதமாக, 22ம் ஆண்டு விளையாட்டு போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது. மாணவ, மாணவிகளை வகுப்பு வாரியாக பிரித்து தடகளம், த்ரோபால், வாலிபால், கிரிக்கெட், கபடி, கோ- கோ, கால்பந்து போட்டிகள் நடந்தன.நேற்று நடந்த மாணவர்களுக்கான, 100மீ ஓட்டத்தில் உற்சாகத்துடன் பங்கேற்று அசத்தினர். போட்டியின் முடிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையினர் முதலிடம், பி.பி.ஏ., துறையினர் இரண்டாமிடம் பிடித்தனர்.மாணவர்கள் பிரிவில் சரவணக்குமார், மாணவிகள் பிரிவில் ஜோஸ்பின் யானிஷா ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு கல்லுாரியின் செயலர் ஜெரோம், கல்லுாரி முதல்வர் அபீட்டர் ராஜ் ஆகியோர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X