இந்தியா

உழவர்கரை நகராட்சியில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்

Added : பிப் 15, 2020
Advertisement

புதுச்சேரி:உழவர்கரை நகராட்சி சார்பில் வீட்டு வரி, சொத்து வரி வசூல் சிறப்பு முகாம் நாளை (16ம் தேதி) நடக்கிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:உழவர்கரை நகராட்சி சார்பில் வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோரின் நலன் கருதி, குறிஞ்சி நகர் 9 வது குறுக்குத் தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நாளை (16ம் தேதி), வீட்டு வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. காலை 9:00 மணி முதல் மாலை 6:00 வரை நடக்கிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறிஞ்சி நகர், குமரன் நகர், அசோக் நகர், அவ்வை நகர், நாவற்குளம் மற்றும் இதர வார்டுகளில் உள்ள வீட்டு வரி நிலுவைதாரர்கள் 2019-2020ம் ஆண்டு வரையிலான காலத்துக்கு வீட்டு வரியைச் செலுத்தலாம்.மேலும், வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோர் நலன் கருதி பிப்., மார்ச் மாதம் முழுவதும் அனைத்து சனிக்கிழமைகளிலும் காலை 9:00 மணி முதல் மாலை 4:30 வரை ஜவகர் நகர் தலைமை அலுவலகம், வி.வி.பி. நகர், கணினி வரிவசூல் மையம் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடி வளாகத்தில் உள்ள வரிவசூல் மையங்கள் வழக்கம் போல் இயங்கும்.

மேலும், propertytax.py.gov.in என்ற இணையதளம் மற்றும் டெபிட் கார்டு மூலமாகவும் வரியைச் செலுத்தலாம். எனவே, வீட்டு வரி, சொத்து வரி நிலுவைதாரர்கள் வரியை உடனடியாக செலுத்தி வட்டி, ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X