இந்தியா

மக்கள் நலன் சார்ந்த தமிழக பட்ஜெட் புதுச்சேரி அ.தி.மு.க., வரவேற்பு

Added : பிப் 15, 2020
Advertisement

புதுச்சேரி:தமிழத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன ளிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள தாக, புதுச்சேரி அ.தி.மு.க., வரவேற்றுள்ளது.

தமிழக பட்ஜெட் குறித்து, புதுச்சேரி சட்டசபை அ.தி.மு.க., தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ள கருத்து:மக்கள் நலன், விவசாய நலன் உள்ளிட்ட அனைத்து விதத்திலும் மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அ.தி.மு.க., அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதை, புதுச்சேரி மாநில அ.தி.மு.க., வரவேற்கிறது.

ஏழை மக்கள் பயன்பெறும் விதத்தில் பொது வினியோகம் திட்டத்தில் குறைந்த விலையில் தரமான உணவு பொருட்கள் வழங்க ரூ. 6,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது வரவேற்கதக்கது.

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இஸ்லாமிய, கிறிஸ்தவ சமுதாய மக்களின் நலனுக்காகவும், அவர்களுடைய வழிபாட்டு தலங்களை சீர்படுத்தவும் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. குடிநீர் பிரச்னை தீர்க்க கடல் நீரை குடிநீராக மாற்றுவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.விவசாய பயிர் கடன்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மேம்பாட்டுக்கு வழிவகுக்கும்.

மொத்த பட்ஜெட்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு மேல் பற்றாக்குறை இருக்கக் கூடாத நிலையில், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.84 சதவீதம் பற்றாக்குறையாக மிகத்துல்லியமாக கணக்கிடப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் மிகத் துல்லியமாக கணக்கிடப்பட்டு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்க்காக தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புதுச்சேரி மாநில அ.தி.மு.க., பாராட்டுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X