இந்தியா

புதுச்சேரி அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது : பா.ஜ.,

Added : பிப் 15, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாகிவிட்டது என பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி அரசின் நிர்வாக சீர்கேட்டால் தினமும் ஒரு கொலை என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ., வால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, மத்திய உள்துறையிடம் நடவடிக்கை எடுக்க கோரியுள்ள நிலையில் கவர்னரும் ஊழல் மீதான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார்.

எந்த நேரத்திலும் இந்த அரசு கலைக்கப்படலாம் என்ற நிலையில் செயலிழந்த தன்மையை மூடி மறைக்க, அவசர சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசின் சி.ஏ.ஏ.,வால் புதுச்சேரியில் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை. ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும், பொதுமக்களும் விரும்பாத ஒரு செயலுக்காக சட்டசபையை கூட்டி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஊழலுக்காக கலைய போகிற ஆட்சியை, சி.ஏ.ஏ.,வுக்காக தியாகம் செய்ய தயார் என நாடகத்தை அரங்கேற்றி இருப்பதை பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது. இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வெகு நாட்களாகிவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X