பொது செய்தி

தமிழ்நாடு

கோவை மாவட்டத்தில் 29.91 லட்சம் வாக்காளர்கள்! அதிக வாக்காளர்களுடன் கவுண்டம்பாளையம் தொடர்ந்து 'டாப்'

Added : பிப் 15, 2020
Advertisement
 கோவை மாவட்டத்தில் 29.91 லட்சம் வாக்காளர்கள்! அதிக வாக்காளர்களுடன் கவுண்டம்பாளையம் தொடர்ந்து 'டாப்'

கோவை:பத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட, இறுதி வாக்காளர் பட்டியலை, நேற்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டார். இதன்படி, கோவை மாவட்டத்தில், 29,91,923 வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த டிச., மாதம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில், கோவை மாவட்டத்தில், 29,23,837 பேர் இருந்தனர்.
அதன் பின், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்யும் பணிகள் நடந்தன.இதன் முடிவில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில், 15,11,767 பெண்கள், 14, 79,786 ஆண்கள், இதர பிரிவினர், 370 உட்பட, மொத்தம் 29,91,923 வாக்காளர்கள் உள்ளது தெரியவந்துள்ளது.4,45,651 வாக்காளர்களுடன், கவுண்டம்பாளையம் தொகுதி முதலிடத்தில் தொடர்கிறது.இது குறித்து, கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக, 1,08,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன; அதில், 73, 910 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள், 23ஆயிரத்து 878பேர் இணைந்துள்ளனர்.ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு, இறந்து போனவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என்ற பிரிவின் கீழ், 5,824 பேரின் பெயர் பட்டியலிருந்து, நீக்கம் செய்யப்பட்டுள்ளது.இனிவரும் காலங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வசதியாக, தொடர் திருத்த பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும்.www.nvsp.in என்ற இணையதளம் அல்லது 'voters helpline app' என்ற செயலி மூலமாகவும் பொதுமக்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். நீக்கம் செய்யக்கூடியவர்களின் பெயர் அதிகம் உள்ளதாக, கூறும் அரசியல் கட்சிகளின் கருத்துகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
அடுத்ததாக, செப்டம்பரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், பட்டியலில் இருந்து நீக்கவும்அளிக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகராட்சி துணை கமிஷ்னர் பிரசன்னா ராமசாமி, வருவாய் கோட்டாச்சியர் சுரேஷ் உட்பட பல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் விபரம்மேட்டுப்பாளையம் - 2,89395சூலுார் - 3,09,606கவுண்டம்பாளையம் - 4,45,651கோவை வடக்கு - 3,27,431தொண்டாமுத்துார் - 3,17,016கோவை தெற்கு - 2,49,590சிங்காநல்லுார் - 3,14,893கிணத்துக்கடவு - 3,10,787பொள்ளாச்சி - 2,24,593வால்பாறை - 2,02, 961

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X