தமிழ்நாடு

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை...21 லட்சம்!;ஆண்களை விட 23,904 பெண்கள் அதிகம்

Added : பிப் 15, 2020
Advertisement
 கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை...21 லட்சம்!;ஆண்களை விட 23,904 பெண்கள் அதிகம்

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில், 21,00,636 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில், 2020ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த டிச., 23ம் தேதி, வெளியிடப்பட்டது. இதில், ஆண்கள் 10,17,948, பெண்கள் 10,38,556, இதரர் 131 பேர் என மொத்தம் 20,56,635 பேர் இடம் பெற்றிருந்தனர். தொடர்ந்து, 2020ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்க திருத்த முறை பணி கடலுார் மாவட்டத்தில் கடந்த டிச., 23ம் தேதி முதல், ஜனவரி மாதம் 22ம் தேதி வரை, நடந்தது.

இதில், புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஒரே தொகுதிக்குள் இடம் மாறுதல் தொடர்பாக 59,706 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 56,453 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. 3,253 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. கலெக்டர் அன்புச்செல்வன், வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், 'கடந்தாண்டு டிச., 23ம் தேதி முதல், ஜனவரி 22ம் தேதி வரை, மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளிலும் நடந்த சிறப்பு சுருக்க முறை திருத்த பணியில், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஒரே தொகுதிக்குள் இடம் மாறுதல் தொடர்பாக 59,706 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில், 56,453 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது.
வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில், 10,38,294 ஆண்கள், 10,62,198 பெண்கள், இதரர் 144 என மொத்தம் 21,00,636 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், ஆண்களை விட பெண்கள் 23,904 பெண்கள் அதிகம் உள்ளனர்.

கடந்த டிச., 23ம் தேதி, வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை விட, 44,001 வாக்காளர்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளனர்' என்றார். டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன், ஆர்.டி.ஓ., (பொறுப்பு) வெற்றிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X