பொது செய்தி

தமிழ்நாடு

கடுகிலும் உண்டு கலப்படம்! இல்லத்தரசிகளே உஷார்

Added : பிப் 15, 2020
Advertisement

கோவை:நாம் உண்ணும் உணவுப் பொருட்களில், கலப்படம் செய்வது சர்வ சாதாரணமாகி விட்டது. கடுமையான சட்டம் இல்லாத காரணத்தால், கலப்படம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.கலப்பட குற்றங்களில் சிக்குவோர், அபராதத்தை செலுத்தி விட்டு, அதே வேலையை மீண்டும் செய்து கொண்டே இருக்கின்றனர். எனவே, எந்தெந்த உணவுப் பொருட்களில் கலப்படம் இருக்கிறது, அதை எப்படி கண்டுபிடிப்பது என்று, நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.இந்திய சமையலறைகளில், கடுகுக்கு எப்போதும் பிரதான இடமுண்டு. அத்தகைய கடுகிலும், கலப்படம் செய்கின்றனர் என்பதுதான் வேதனை. மனிதர்களுக்கு பக்கவாதம் வருவதற்கு முக்கிய காரணியாக, இந்த 'ஆர்ஜிமோன்' களைச்செடியின் விதைகள் உள்ளன. கலப்படத்தை இல்லத்தரசிகளே எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.எப்படி கண்டுபிடிப்பது?சிறிதளவு கடுகை கையில் எடுத்துப் பாருங்கள். கடுகில் கலப்படம் செய்யப்பட்ட 'ஆர்ஜிமோன்' விதைகள் வெளிப்புறத்தில் சொரசொரப்பாகவும், அளவில் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும்.கலப்படம் இல்லாத கடுகை உடைத்தால், உள்ளே மஞ்சள் நிறமாக இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட 'ஆர்ஜிமோன்' விதைகள், உள்ளே வெள்ளையாக இருக்கும்.கடுகை ஒரு டம்ளர் நீரில் இட்டால், உண்மையான கடுகு நீரில் மூழ்கி விடும். கலப்படம் செய்யப்பட்ட 'ஆர்ஜிமோன்' விதைகள், நீரின் மேற்பரப்பில் மிதக்கும்.உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பதுபற்றி தெரியவந்தால், பொதுமக்கள் உடனடியாக எங்களது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு, 94440 42322 புகார் தெரிவிக்கலாம். உணவுப் பொருட்கள், பாக்கெட், லேபிளில் இருக்கும் விவரங்களுக்கு மாறாக இருந்தாலும், காலாவதி ஆகி இருந்தாலும், எங்களுக்கு தெரிவிக்கலாம்.- டாக்டர் தமிழ்செல்வன்நியமன அலுவலர், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X