பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் மேம்பாட்டில் சிறந்த பங்களிப்பு என்.எல்.சி., நிறுவனத்திற்கு தேசிய விருது

Added : பிப் 15, 2020
Advertisement
 மகளிர் மேம்பாட்டில் சிறந்த பங்களிப்பு என்.எல்.சி., நிறுவனத்திற்கு தேசிய விருது

நெய்வேலி:என்.எல்.சி., இந்தியா நிறுவனம் மகளிருக்கான மேம்பாட்டு பணிகளை சிறப்பாக செய்து வருவதை பாராட்டி, தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் தேசிய விருது வழங்கினார்.

நாட்டில் உள்ள 250 பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் ஒரு அமைப்பு 'விப்ஸ்'. இந்த அமைப்பு, மகளிர் மேம்பாட்டிற்காக, குறிப்பாக கிராமப்புற பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலனுக்காக, சிறப்பான பணியை மேற்கொண்டு வரும் நிறுவனங்களை, ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.

அந்த வகையில், என்.எல்.சி., நிறுவன விப்ஸ் அமைப்பு, நெய்வேலி மகளிர் மன்றத்தின் வாயிலாக, நெய்வேலிக்கு அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மகளிருக்கு தையல் பயிற்சி, அழகுகலை உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறது. கிராம மக்களுக்கு 'ஆரோக்யா' என்ற மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதுபோன்ற நலப்பணிகள் மூலம், இக்கடினமான போட்டியில், நவரத்னா பிரிவில், தேசிய விருதின் 2ம் பரிசு, என்.எல்.சி., இந்தியா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.விப்ஸ் அமைப்பின் 30வது தேசிய மாநாட்டின் துவக்க விழா,ஹைதராபாத்தில், நேற்று முன்தினம் நடந்தது. தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விருதினை வழங்க, என்.எல்.சி., இந்தியா நிறுவன மனிதவளத்துறை மற்றும் மக்கள் தொடர்புத்துறை முதன்மை பொதுமேலாளர் குருசாமி நாதன், விப்ஸ் அமைப்பின் நெய்வேலி மைய பொருளாளர் விஜயலட்சுமி, அமைப்பின் தென்மண்டல செயலர் டாக்டர் தாரிணி மவுலி மற்றும் வனஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X