பொது செய்தி

தமிழ்நாடு

பட்ஜெட்; அறிவிப்பெல்லாம்

Added : பிப் 15, 2020
Advertisement

தமிழக சட்டசபையில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தபட்ஜெட் அறிவிப்புகள் குறித்து, கோவை மக்கள் என்ன சொல்கின்றனர்?தகுதியானவர்களுக்கு ஒதுக்கணும்பசுமை வீடு திட்டத்தில் கட்டுமான செலவுகளுக்கு, 2 லட்சத்து 10 ஆயிரமாக, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் உரிய பயனாளிகளை சென்றடைவதில்லை. ஆக்கப்பூர்வ திட்டங்களை அறிவிப்பதெல்லாம் சரி. உரிய பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்.- எஸ்.மயிலா காமராஜர் நகர்.சிறந்த அறிவிப்புரேஷன் கார்டில் எங்கு வேண்டுமானாலும் பொருட்களை வாங்கும் வசதி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், முத்துார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கோவையில் வசிக்கிறேன். சொந்த ஊர் முகவரியில் தான் ரேஷன் கார்டு உள்ளது. இத்திட்டத்தால் தற்போது, கோவையிலே ரேஷன் பொருட்கள் வாங்க வசதியாக இருக்கும்.- எஸ்.பூமிநாதன் சுந்தராபுரம்.பஸ்களை கவனிங்க!பஸ்களில் சி.சி.டிவி., கேமரா பொருத்துவது தேவைதான். எனினும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பல பஸ்கள் இயங்குகின்றன. அதை சரிசெய்ய நடவடிக்கை அவசியம். அத்திக்கடவு, அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளது நல்ல பலனை தரும். வேலைவாய்ப்பு, சாலை வசதி மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி.-தாரணிபிரியா மைல்கல்.பஸ்சிலேயே நடக்குமாதிட்டங்கள் அறிவிப்பது எளிது; அதை முறையாக விரைந்துசெயல்படுத்தினால் நல்லது. அனைத்து பஸ்களிலும் சி.சி.டி.வி., என்பது தேவையற்ற செலவினம். ஒரு குற்றம் பேருந்தில் நடந்து விட்டது என்பதற்காக, பிற குற்றங்களும் பேருந்திலேயே நடக்குமா என்ன? குற்றங்கள் குறைக்க வேறு நடவடிக்கை எடுக்கலாம். இந்நிதியை ஆக்கப்பூர்வமாக தொழில்நுட்ப ரீதியில் பெண்கள் பாதுகாப்பு சார்ந்த வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.-மல்லிகா கல்லுாரி மாணவி.அரசுப்பள்ளியை கவனிங்க!எல்லா பட்ஜெட்டிலும், கல்வித்துறைக்கு அதிகம் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரம் உயரவில்லை. தமிழகத்தில் இன்னும் பல ஆயிரம் பள்ளிகள் உடைந்த ஓட்டு கூரையுடன், அடிப்படை வசதி இல்லாமல்தான் செயல்படுகின்றன. நிதி ஒதுக்கினால் மட்டும் போதாது; அதை பயனுள்ள வகையில் செலவிடவேண்டும்.பிரகாஷ் டெய்லர்.ரியல் எஸ்டேட் வளரும்முத்திரைத்தாளுக்கான வரி ஒரு சதவீதத்தில் இருந்து 0.25 ஆக குறைக்கப்பட்டுள்ளதால், ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சியடையும். குறைந்த பட்ஜெட்டில் வீடு வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கும். விபத்து காப்பீடு திட்டம், முதியோருக்கு ஆதரவு மையம், புதிய மருத்துவ கல்லுாரிகள் உள்பட, இந்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் நிறைய உள்ளன. ராஜ்குமார்(வக்கீல்) சிங்காநல்லுார். பெண்களுக்கு பாதுகாப்பு வேணும்வெளியூர்களில் தனியார் விடுதிகளில் தங்கும் பெண்களுக்கு, பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. அரசு சார்பில் கட்டப்படும் விடுதிகளில் தகுந்த, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும். நகர பகுதியில் கட்டினால் சிறப்பாக இருக்கும். பெயருக்காக கட்டாமல் அனைத்து வசதிகளும், ஏற்படுத்தினால் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.அனிதா(வக்கீல்) ஆலாந்துறை.இளைஞர் நலனுக்கு நிதி போதாதுஇளைஞர் நலன் மேம்பாட்டுக்காக, ஒதுக்கப்பட்டுள்ள தொகையை, இன்னும் அதிகரித்திருக்கலாம். வெறும் 50 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதைவைத்துக்கொண்டு, திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. எங்களை போன்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் பயிற்சி அளிக்கவும் அதிக தொகை ஒதுக்கி இருக்கலாம்.-கார்த்திகேயன் குறிச்சி.அடிப்படை தேவைகளுக்கு 'ஓகே'சுகாதாரம், கல்வித்துறை என, அடிப்படைத் தேவைகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. இத்தொகையை முழுமையாக பயன்படுத்த வேண்டும். மக்களுக்கு முறையாக சென்றடையும் வகையில், அதிகாரிகள் செயல்பட வேண்டும்.-வின்சென்ட் போத்தனுார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X