பொது செய்தி

தமிழ்நாடு

அங்கீகாரமற்ற மனைகளை முறைப்படுத்த குழு! மாநகராட்சி அதிகாரிகள் 'சுறுசுறு'

Added : பிப் 15, 2020
Advertisement

கோவை:அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்த, கோவை மாநகராட்சியில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட, சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, காளப்பட்டி உள்ளிட்ட, 11 உள்ளாட்சி அமைப்புகளில், ஏராளமான லே-அவுட்டுகள் அங்கீகாரமற்றவையாக இருக்கின்றன. 'பஞ்சாயத்து அப்ரூவல்' என்ற பெயரில், மனைப்பிரிவு உருவாக்கப்பட்டு, வீடு, கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை முறைப்படுத்த, மாநகராட்சி முயற்சித்து வருகிறது.
இதுதொடர்பாக, நகரமைப்பு பிரிவினர் மண்டலம் வாரியாக ஆவணங்களை பட்டியலிட்டனர். வடக்கு - 532, கிழக்கு - 448, மேற்கு - 417, தெற்கு - 71, மத்திய மண்டலத்தில், 47 என, மொத்தம், 1,515 அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் இருப்பது அறியப்பட்டது. இவற்றில் மட்டும், 50 ஆயிரத்து, 892 வீடுகள் கட்டப்பட்டு இருப்பது, அதிர்ச்சியடைய வைத்தது.அதனால், அடையாளம் காணப்பட்ட லே-அவுட்டுகள் மற்றும் வீடுகளை முறைப்படுத்த, நகர ஊரமைப்புத்துறையிடம் மாநகராட்சி முன்அனுமதி பெற்றுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மண்டலத்துக்கும் உட்பட்ட, 20 வார்டுகளிலும் எந்தெந்த லே-அவுட் அங்கீகரிக்கப்படாதவை; மனைகளின் க.ச., எண் குறிப்பிட்டு பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது.அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளில் வசிப்பவர்கள், கட்டணம் செலுத்தி, முறைப்படுத்திக் கொள்ளலாம்.
இதற்காக, மாநகராட்சியில் மண்டலம் வாரியாக சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.வார்டுதோறும் சிறப்பு முகாம்மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'அங்கீகாரமற்ற மனைகளை முறைப்படுத்த, மண்டல உதவி கமிஷனர்கள் தலைமையில் உதவி நகரமைப்பு அலுவலர், பதிவு பெற்ற பொறியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுவினர், ஒவ்வொரு வார்டிலும் சிறப்பு முகாம் நடத்தி, அங்கீகாரமற்ற மனைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுப்பர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X