பொது செய்தி

தமிழ்நாடு

'கிராமத்து பொண்ணு நான்'

Added : பிப் 15, 2020
Share
Advertisement
 'கிராமத்து பொண்ணு நான்'

கோவை இந்துஸ்தான் கல்லுாரியின், ஹிலாரிகாஸ் நிகழ்ச்சியில் நேற்று, நடிகை லாஸ்லியா பங்கேற்றார். இலங்கை தமிழில், 'நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள்; நமக்குள் எந்த பேதமும் இல்லை. நம் வாழ்வு வளம் பெறட்டும்' என்றார்.
மாணவர்களின் கேள்விகளுக்கு, அவர் அளித்த 'கூல் கூல்' பதில்கள்...நடிகர் கமல்ஹாசனுடன் திரை அனுபவங்கள் பற்றி?தனியார் 'டிவி' நிகழ்ச்சியில் பங்கேற்ற போதுதான், கமலஹாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் கற்றுக்கொள்ள, ஏராளமான விஷயங்கள் உள்ளன. சிக்கலான நேரங்களில், பிறரை நாசுக்காக கையாள்வார். சிறந்த நடிகர் என்பதை, ஒவ்வொரு நொடியும் நிரூபித்து கொண்டே இருப்பார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின், படவாய்ப்புகள் கிடைத்தனவா?அப்புறம்....பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும், 'பிரண்ட்ஷிப்' படத்தில் ஜோடியாக இணைகிறேன்.
அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது. இதுதவிர, நடிகர் ஆதியுடன் நடிக்கவுள்ள, படத்தின் பெயர் விரைவில் வெளியிடப்படும். இதுதவிர, மூன்று படங்கள் கையெழுத்தாக உள்ளன. விரைவில் பெரிய திரையில் காணலாம்.வாழ்க்கையில் வெற்றி பெற உங்கள் அட்வைஸ்?நான் சின்ன வெற்றியை தான், அடைந்திருக்கிறேன். மக்கள் கொடுக்கும் அன்பும், ஆதரவும் அளப்பரியது.
சமூக வலைதளங்களில், எங்களுக்காக மீம்ஸ் போடுகிறீர்கள்; எங்களை திட்டினால், முன்வந்து சண்டை போடுகிறீர்கள். உங்கள் அன்பு மட்டுமே, என்னை உற்சாகப்படுத்துகிறது.இலங்கையில், ஒரு கிராமத்தில் பிறந்த, பெண்ணாகிய என்னாலே, பெரிய திரைக்கு வர முடிந்திருக்கிறது என்றால், உங்களாலும் உயரங்களுக்கு வர முடியும். வாழ்க்கையில் வெற்றி பெற, நேர்மையான உழைப்பு மட்டுமே அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X