உழவர் காவியம்ராமநாதபுரத்தில் செயல்படும் தமிழ்நாடு இலக்கிய பேரவை சார்பில், பழனிசாமி எழுதிய உழவர் காவியம் நுால் வெளியீட்டு விழா இன்று நடக்கிறது. ராமநாதபுரம், கணேசபுரம், ராமசாமி வீதியில் உள்ள, பொதுஜன சங்கம் நடராஜா வாசகசாலை அறக்கட்டளை வளாகத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு, விழா துவங்குகிறது. இதில், இந்நுாலை வெளியிட்டு, புலவர் திருநாவுக்கரசு பேசுகிறார்.துாய்மை பணிசிங்காநல்லுார் - வெள்ளலுார் சாலையில் உள்ள, எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி சார்பில், மாநகராட்சி, 64வது வார்டு தத்தெடுக்கப்பட்டு, துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று இந்த வார்டுக்கு உட்பட்ட, ஹவுசிங் யூனிட், ஸ்ரீனிவாசா காலனியில், இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். துாய்மைப்பணியில் ஈடுபட விரும்புவோர் இன்று காலை, 7:00 மணிக்கு பங்கேற்கலாம்.திருக்குறள் முற்றோதல்பள்ளி மாணவ, மாணவியர் திருக்குறளை, இளம் வயதில் கற்றுக்கொள்வதன் மூலம், நல்லொழுக்கம் உடையவர்களாக, சுயநலமற்றவர்களாக, தன்னம்பிக்கையுடன் பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடிய லட்சிய இளைஞர்களாக உருவாகி, தன் எண்ணம், சொல், செயல்களால், அறம்சார்ந்த சமுதாய கடமைகளை ஆற்றி, அதன் மூலம் சமுதாய மேம்பாடும். இதற்கான பயிற்சி வகுப்பை, ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் மற்றும் திருக்குறள் உலகம் கல்விச்சாலை இணைந்து நடத்துகின்றன. இவ்வகுப்பு, சூலுார் - இருகூர் ரோடு, பள்ளபாளையத்தில் உள்ள, ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் இன்று மாலை, 5:00 முதல், 6:00 மணி வரை நடக்கிறது.நுால் அறிமுக விழாகோவையில் தமிழருவி மணியன் எழுதிய 'வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்' நுால் வெளியீட்டு விழா நடக்கிறது. இன்று, மாலை 6:30 மணிக்கு, ராம்நகர் சென்குப்தா வீதியில் உள்ள, விஜய் பார்க் இன் ஓட்டலில் நடக்கும், நிகழ்ச்சியில், அன்னபூர்ணா குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், பாரதீய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், மரபின் மைந்தன் முத்தையா, காந்தி மக்கள் இயக்கம் தேவராஜன், உள்ளிட்டோர் நுால் குறித்து மதிப்புரை வழங்குகின்றனர். நுாலாசிரியர் தமிழருவி மணியன் ஏற்புரை வழங்குகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE