பொது செய்தி

தமிழ்நாடு

யோகாவில் குழந்தைகள் சாதனை!

Added : பிப் 15, 2020
Advertisement
 யோகாவில் குழந்தைகள் சாதனை!

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய மாருதி உடற்கல்வியியல் கல்லுாரியில், கோவை மாவட்ட பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற விளையாட்டு விழா நேற்று நடந்தது. இதில், மாணவர்கள் யோகாவில் உலக சாதனை நிகழ்த்தினர்.பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண பரமஹம்சரின் நுாற்றாண்டு நிறைவு நினைவு, 84ம் ஆண்டு விளையாட்டு விழாவில், பள்ளி மாணவர்கள் யோகா செய்து, உலக சாதனை படைத்தனர்.மொத்தம், 3,000 மாணவர்களில், 2,847 மாணவர்கள் யோகாசனத்தை சரியாக செய்து, சாதனை படைத்தனர். பத்மாசனம், பரிவத்தாசனம், வஜ்ராசனம், உஸ்டாசனம், யோகமுத்ரசனம் ஆகிய யோக ஆசனங்களை, அனைவரும் ஒரே நேரத்தில் செய்து உலக சாதனை படைத்தனர்.தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியரின் கொடி பயிற்சி, தேங்காய்த்தொட்டி பயிற்சி, வாண்ட்ஸ் பயிற்சி, பூப்பந்து பயிற்சி, அபிநய ஆடல் , ஒயிலாட்டம், யோகாசனப் பயிற்சிகளை செய்து காண்பித்தனர்.விளையாட்டு விழாவுக்கு, பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமகுளம், மற்றும் காரமடை ஒன்றியங்களில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.இவ்விழாவுக்கு, வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் சாய்குமார் வரவேற்றார். உலக சாதனை அமைப்பின் நிறுவனத் தலைவர் யுவ தயாளன் யோக உலக சாதனை சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X