சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

Added : பிப் 15, 2020
Share
Advertisement
 போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

நெல்லிக்குப்பம்:காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி, தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் சத்தியபிரியா, 21; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கடந்த 12ம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இது குறித்து சத்தியபிரியாவின் தந்தை பழனிவேல் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். ஆனால், கல்லுாரியில் காணாமல் போனதால் சிதம்பரம் போலீசார் தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, நெல்லிக்குப்பம் போலீசார் கூறியுள்ளனர்.பெற்றோர் பல முறை வலியுறுத்தியும் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதை கண்டித்து, நேற்று மதியம், சத்தியபிரியாவின் தாய் சாரதாம்பாள், தந்தை பழனிவேல், தம்பி சதீஷ் ஆகியோர் பெட்ரோல் கேனுடன் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் வந்தனர். அங்கு சாரதாம்பாள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உடனடியாக சத்தியபிரியாவை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X