சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள்- அதிகாரிகள் வாக்குவாதம்

Added : பிப் 15, 2020
Advertisement

கடலுார்:கடலுார் மீன்பிடி துறைமுகத்தில், தடை செய்யப்பட்ட வலைகள் மூலமாக பிடிக்கப் பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள், இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது. அப்படி மீன்பிடித்தால், வலைகள், மீன்கள் பறிமுதல் செய்யப்படும் என, மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் பிடித்து வரும் மீன்களை சிலர் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.

அதன்பேரில், மீன்வளத் துறை உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி தலைமையிலான குழுவினர், ஆய்வு செய்ய, மீன்பிடி துறைமுகத்திற்கு, நேற்று காலை வந்தனர். இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த போலீசார், மீனவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.மீன்வளத்துறை அதிகாரிகளும் அங்கிருந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X