சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1,200 மதுபாட்டில்கள் பறிமுதல்

Added : பிப் 15, 2020
Advertisement
 1,200 மதுபாட்டில்கள் பறிமுதல்

கடலுார்:புதுச்சேரியிலிருந்து கடத்தி செல்லப்பட்ட 1,200 மது பாட்டில்கள், 30 லிட்டர் சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மதுவிலக்கு அமல் பிரிவு தனிப்படை போலீசார் ரெட்டிச்சாடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து கடலுார் நோக்கி வந்த டிஎன் 31 ஏஎப் 2009 என்ற எண் கொண்ட மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 48 அட்டைப் பெட்டிகளில் 1200 மதுபாட்டிகள் மற்றும் 30 லிட்டர் புதுச்சேரி கள்ளச்சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில், லாரியை ஓட்டி வந்தது, விழுப்புரம் மாவட்டம், வி.அகரம் ,மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனுசாமி மகன் சிவகாந்தன்,26: என்பதும், புதுச்சேரியிலிருந்து தஞ்சாவூவருக்கு மதுபாட்டில்களை கடத்திச் செல்வதும் தெரியவந்தது.இது குறித்து கடலுார் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சிவகாந்தனை கைது செய்து மதுபாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X