பொது செய்தி

தமிழ்நாடு

எதையோ எதிர்பார்த்து...

Added : பிப் 15, 2020
Advertisement
 எதையோ எதிர்பார்த்து...

இரவு 12:00 மணி...ரயில்வே ஸ்டேஷன்.வடநாட்டு பயணிகள் பலர், மூட்டை முடிச்சுக்களை தலைக்கு வைத்து உறங்கி கொண்டிருந்தனர். வெளியே பாதி ஷட்டர் மூடப்பட்ட மசூதி ஓர கடைகளில் பிரியாணி, புரோட்டா விற்பனை, அந்த நேரத்திலும் சூடு பறந்தது.மீண்டும் வண்டியை கிளப்பி, அவிநாசி ரோடு மேம்பாலம் ஏறி, மரக்கடை சிக்னலை கடந்து, சுக்கிரவார்பேட்டை ரோடு வழியாக பூமார்க்கெட் ரோட்டில் திரும்பி, வண்டியை முறுக்கினோம். காற்றில் மிதந்த பூவாசம் மனதை மயக்கியது.எல்இடி பல்புகளின் பளீர் வெளிச்சத்தில்,ஆள் உயர மாலைகள், வரிசையாக தொங்கின.

ஊட்டி ரோஜாக்கள், மலர் வளையங்கள் மற்றும் உதிரி பூக்கள் கூடைகளில் குவிக்கப்பட்டு இருந்தன.இந்த மாலைக்கடைகள், எப்போதும் மூடப்படுவதில்லையாம். மாலைகளுக்கு நீர் தெளித்துக் கொண்டிருந்த கடைக்காரரிடம் பேசினோம்.''சார்... இந்த மாலை கடைகள், 24 மணி நேரமும் திறந்துதான் இருக்கும். கட்டின மாலைகளை எடுத்து கூடையில் எடுத்து வைத்து, பூட்டி வைக்க முடியாது. வெச்சா காலையில் நார் மட்டும்தான் இருக்கும் பூ இருக்காது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தரம், மாலைக்கு நீர் தெளிச்சுக்கிட்டே இருக்கணும்.இல்லைன்னா வாடி உதிர்ந்து போகும். ராத்திரியில்தான் மாலை ஏவாரம் நல்லா நடக்கும். நம்மூர் சுற்றுவட்டாரத்துல நடுசாமத்துல ஒருத்தர் இறந்துட்டா, மாலை வாங்க முதல்ல இங்கதான் வருவாங்க...,''அவர் சொல்லிக்கொண்டிருந்த போதே, ஒரு இன்னோவா கார் வந்து நின்றது. சோகம் அப்பிய முகத்துடன் காரில் இருந்து இறங்கியவர்கள், மலர் வளையம், மாலைகள் வாங்கி புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X