திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

Added : பிப் 15, 2020
Share

புவனகிரி:காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் .

புவனகிரி தாலுகா, மருதுார் அருகே வத்தராயன்தெத்தை சேர்ந்தவர் தமிழ்மணி மகன் ராகுல், 22; இவர் புவனகிரியை சேர்ந்த 19 வயது பெண்ணை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இளம் பெண் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய போது, ராகுல் மறுத்துள்ளார். பெண் கொடுத்த புகாரின் பேரில், மருதுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் வழக்குப் பதிந்து ராகுலை கைது செய்து விசாரித்தில், ராகுல் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X