ஐரோப்பிய பழங்கதைகளை நம்புறாங்க; இந்திய இதிகாசங்களை மறுப்பது ஏன்? எழுத்தாளர் ஜெயமோகன் கேள்வி

Added : பிப் 15, 2020 | கருத்துகள் (12)
Advertisement
 ஐரோப்பிய பழங்கதைகளை நம்புறாங்க; இந்திய இதிகாசங்களை மறுப்பது ஏன்? எழுத்தாளர் ஜெயமோகன் கேள்வி

நம் மரபுக்கு சொந்தமான மாபெரும் இதிகாசம் மகாபாரதம். மனித வாழ்வின் அனைத்து சாரங்களும் இதில் அடங்கி இருக்கின்றன. வேறு எந்த நாட்டவருக்கும் இப்படி ஒரு காவியம் இல்லை. காலந்தோறும் கதைகளால் மகாபாரதம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் கோவை வந்த எழுத்தாளர் ஜெயமோகன், இது குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.மகாபாரதம், இந்திய மக்கள் அனைவருக்கும் சொந்தமான, பூர்வீக கதை. இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனின் கதையும் இதில் உள்ளது. இடைச்செருகல்களும் உண்டு.பவுத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள் என, அனைவருக்கும் மகாபாரதம் சொந்தம்.அரசர்கள், முனிவர்கள், அசுரர்கள் என, தகவல் களஞ்சியமாக மகாபாரதம் உள்ளது.
வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள், தங்களுடைய கதைகளை பாரத கதையுடன் சேர்த்துள்ளனர்.தெருக்கூத்துகள், நாடகங்கள் வழியாக பல கதைகள், சம்பவங்கள் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, விராட பருவத்தில் உத்தரையின் கதை சேர்க்கப்பட்டுள்ளது. அதனால்தான் இது மக்கள் இலக்கியமாக உள்ளது.ஐரோப்பிய, கிரேக்க பழங்கதைகளை உண்மை என, ஏற்றுக்கொள்பவர்கள், இந்திய இதிகாசங்களையும், தொல்கதைகளையும் ஏற்க மறுக்கின்றனர்.
இந்திய ஞான மரபில் தோன்றிய மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்கள் அழியாத காவியங்களாக, காலந்தோறும் புதிது புதிதாக எழுதப்பட்டு கொண்டே இருக்கிறது.நாம் நமது வேர்களில் இருந்து, இலக்கியங்களை உருவாக்க வேண்டும். அசலாக சிந்திப்பவர்கள் முழுமையாக மகாபாரதத்தை படிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Muthuraj - Sivakasi,இந்தியா
24-பிப்-202008:37:22 IST Report Abuse
K.Muthuraj இந்து மதம்னா என்னப்பா?
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
20-பிப்-202019:43:16 IST Report Abuse
Ramesh இதற்கு காரணம் இங்கிலாந்து அரசும் & மதமும் (Christianity) மற்றும் அவர்களது கல்வி முறையும் தான் ...அதை 1947 பிறகு இந்திய நாட்டின் பிரதம மந்திரி பொறுப்பேற்ற நேரு குடும்பமும் அவர்களது முஸ்லீம் மதம் மேல் இருந்த பாசமும் அதனால் Maulana Abul Kalam Azad போன்றோரை கல்வி அமைச்சராக நியமித்தும் அவர்கள் இந்திய வரலாற்றை தங்களுக்கு வசதியாக படிப்பின் வழியாக பொய் சொல்லி வந்த காரணத்தால் பொய் நிஜமாக மாறியது & நிஜம் பொய்யாகியது ..இதில் நாட்டை சீரழித்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்கும் உள்ளது ....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-பிப்-202013:11:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பயம் காட்டி, மிரட்டி அதை மூலதனாக்கி உலகின் அறிவு, ஆற்றல் இவைகளின் மூலதனமில்லாத முதல் வியாபாரம் கடவுள். மதத்தை பிறப்பால் ஒருவரை மதத்தில் இணைத்து கொள்வது அதை நெட் ஒர்க் வியாபார தந்திரமாக மாற்றியது எல்லாமே வியாபார தந்திரம் தான்.. வியாபாரத்தில் போட்டி, பிராண்டிங் இல்லாமல் இருக்குமா, அதான் மதங்கள் உருவான விதம்.. உங்க டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கா? உங்க சாமிக்கு இந்த பவர் இருக்கா? கேக்குறதுக்கு உலகம் முழுவதுமாக அக்மார்க் அறிவாளிகள் இருக்கும் போது, ஏமாத்தி பிழைப்பவனுக்கு என்ன கவலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X