பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி

Added : பிப் 15, 2020
Advertisement
 சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி

சிதம்பரம்:சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 39ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, வரும் 19ம் தேதி துவங்குகிறது.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், சிதம்பரம் வி.எஸ்., டிரஸ்ட் வளாகத்தில், 39 வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா,வரும் 19 ம் தேதி துவங்குகிறது. புதன்கிழமை (19 ம் தேதி) டில்லி காயத்திரி ஜெயராமன் பரதநாட்டியம், அமெரிக்கா கலாதாரா ஆர்ட்ஸ் அகாடமி மாணவிகளின் பரத நாட்டியம், கொல்கத்தா ஸ்ரீஜன் சந்தா குழுவினரின் ஒடிசி நாட்டியம், விசாகப்பட்டினம் கலாகேந்திரா மாணவிகளின் குச்சுப் புடி நாட்டியம் நடக்கிறது.

வரும் 20ம் தேதி கோவை சிவாஸ் டான்ஸ் அகாடமியின் பரத நாட்டியம், கொல்கத்தா சுமன்ஜித் சக்கரவர்த்தியின் ஒடிசி, சென்னை முத்ராலாயாவின் நால்வர் நாடகம் நடக்கிறது. 21 ம் தேதி பெங்களூர் சங்கீதாவின் பரதநாட்டியம், சென்னை அஞ்சனா குழுவினரின் சொக்கநாதர் உலா நாடகம், சென்னை சைலசுதா அகாடமியின் அத்தனின் கூத்து, கொச்சின் சத்யாஞ்சலி அகாடமியில் அய்யப்ப சரித்திரம் என்ற குச்சுப்புடி நாட்டியம் நடக்கிறது.

வரும் 22 ம் தேதி, அமெரிக்கா உத்ரா மோகனின் பரதநாட்டியம், சென்னை அபிநயா நாட்டியாலயாவின் சிவார்ப்பணம், மேற்கு வங்கம் சிவமல்லாரி டான்ஸ் அகாடமியின் பரதநாட்டியம் நடக்கிறது. 23 ம் தேதி சிதம்பரம் கலைவாணி இசை நாட்டியாலயாவின் பரதநாட்டியம், ரஷ்யா சம்ஸ்கார் பவுண்டேஷன், திருப்பதி - தபஸ்யா பள்ளியின் குச்சுப்புடி, காலிகட் நாட்டிய தர்பணாவின் மாயமோகனம் ஆட்டம், சென்னை ஸ்ரீ சாய் நிருத்யாலயாவின் சிவபுராணம் நாட்டிய நாடகம் நடக்கிறது.

நாட்டியாஞ்சலி விழாவில், தினமும் மாலை 5.45 மணி முதல், இரவு 10:00 மணி வரை பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் 400 க்கும்மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் தலைவர் முத்துக்குமரன், செயலர் வழக்கறிஞர் சம்பந்தம், பொருளாளர் நடராஜன், பழனி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X