சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பு காவல் சட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரி கைது

Added : பிப் 15, 2020
Advertisement

கடலுார்:கள்ளச்சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம் அடுத்த கொரக்கைவாடி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ஜெயபால்,43: இவர் கடந்த மாதம் 29ம் தேதி கள்ளச்சாராயம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது விருத்தாசலம் மதுவிலக்கு அமல்பிரிவு, ராமநத்தம், சிறுபாக்கம் போலீசில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில், கலெக்டர் அன்புச்செல்வன், ஜெயபாலை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.இதன் பேரில் விருத்தாசலம் மது விலக்கு இன்ஸ்பெக்டர் பிருந்தா மற்றும் போலீசார் ஜெயபாலை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X