சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் கைது; இருவருக்கு வலை

Added : பிப் 15, 2020
Advertisement

விருத்தாசலம்:மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள வண்ணாங்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் எழிலரசன், 28. இவரது மனைவி பத்மாவதி, 26. இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். எழிலரசன் அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, பத்மாவதியை கொடுமைப் படுத்தினார்.

கடந்த 9ம் தேதி, எழிலரசன், அவரது தந்தை கொளஞ்சி, தாய் இந்திரா ஆகியோர் பத்மாவதிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து, பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப் -இன்ஸ்பெக்டர் காமிலா பானு, எழிலரசன், கொளஞ்சி, இந்திரா மீது வழக்கு பதிவு செய்து, எழிலரசனை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X