தமிழ்நாடு

மாவட்டத்தில் மொத்த வாக்காளர்... 23 லட்சம்! பல்லடம் தொகுதியில் அதிகம்

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020
Advertisement
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்... 23 லட்சம்!  பல்லடம் தொகுதியில் அதிகம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை, 23 லட்சத்தை தாண்டியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் வரைவு பட்டியல், டிச., 23ல் வெளியானது.
வரைவு பட்டியலில், 11 லட்சத்து, 17 ஆயிரத்து, 950 ஆண்கள்; 11 லட்சத்து, 31 ஆயிரத்து, 445 பெண்கள்; 255 திருநங்கைகள் என, 22 லட்சத்து, 49 ஆயிரத்து, 650 வாக்காளர் இருந்தனர்.மொத்தம், 4,888 பேர் திருத்தம் மேற்கொண்டனர்; 3,553 வாக்காளர், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் பெற்றனர். மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 974 ஆண்கள்; 29 ஆயிரத்து, 181 பெண்கள்; 23 திருநங்கைகள் என, 54 ஆயிரத்து, 178 பேர், வாக்காளராக இணைந்துள்ளனர்.
ஆண்கள், 1,168; பெண்கள், 1,178; திருநங்கை ஒன்று என, 2,347 வாக்காளரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் விஜய கார்த்திகேயன், வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட்டார். கட்சியினர் முன்னிலையில், டி.ஆர்.ஓ., சுகுமார் பெற்று கொண்டார். ஆர்.டி.ஓ., கவிதா, மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் முருகதாஸ் உடனிருந்தனர்.
மாவட்ட அளவில், ஆண் வாக்காளரை காட்டிலும், 17 ஆயிரத்து, 692 பெண் வாக்காளர் அதிகம் உள்ளனர். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் தொகுதிகளில், ஆண் வாக்காளர் அதிகம் உள்ளனர்.மற்ற, ஐந்து தொகுதிகளில், ஆண்களை காட்டிலும், பெண் வாக்காளரே அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X