பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.1.15 கோடி: கூட்டுப்பண்ணையம் திட்டத்தில் ஒதுக்கீடு

Added : பிப் 15, 2020
Advertisement

திருப்பூர்:கூட்டு பண்ணையம் திட்டத்தில், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், நவீன வேளாண் கருவி வாங்க, 1.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின், கூட்டு பண்ணையம் திட்டத்தில், உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்படுகிறது. ஒரே வகை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், 20 பேர் இணைந்து, ஆர்வர் குழு அமைக்கின்றனர்.
ஆர்வலர் குழுவில் உள்ள, நிர்வாகிகள் இணைந்து, உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைத்து, பதிவு செய்கின்றனர்.அரசு வழங்கும் மானியத்தை பெற்று, விவசாய மேம்பாட்டு பணிகளை தொடர, உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில், வேளாண்துறை சார்பில், 23 உழவர் உற்பத்தி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மொத்தம், 115 உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உழவர் உற்பத்தி குழுக்களுக்கு, தமிழக அரசு, தலா, ஐந்து லட்சம் ரூபாய் மானியம் ஒதுக்கியுள்ளது.மாவட்டத்தில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, இந்தாண்டில், 1.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிதியை கொண்டு, விவசாய பணிகளுக்கு தேவையான, நவீன வகை கருவிகளை வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.டிராக்டர், சிறிய வகை டிராக்டர்கள், நாற்று நடும் கருவிகள், தட்டு வெட்டும் கருவிகள், புல் நறுக்கும் கருவிகள் என, பல்வேறு நவீன கருவிகளை வாங்கி, விவசாயத்தை நவீனப்படுத்தும் நோக்கில், கூட்டுப்பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.வேளாண்துறை இணை இயக்குனர் மனோகர் கூறியதாவது:கடந்த, 2017-18 ல், கூட்டு பண்ணையம் திட்டத்தில், 1.30 கோடி ரூபாயில், 177 வேளாண் கருவி வழங்கப்பட்டுள்ளது. 2018-19ல் , 1.15 கோடி ரூபாய் மதிப்பில், 219 கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், 1.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் கருவிகளை வாங்க வசதியாக, உழவர் உற்பத்தி குழு மற்றும் வேளாண் கருவி உற்பத்தி நிறுவனங்கள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டது. முன்கூட்டியே குழுக்களுக்கு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதுது. மீதி தொகையை, குழுவினர் பங்களிப்பாக செலுத்தி, கருவிகளை வாங்கிக்கொள்ளலாம்.இதுவரை, 3.60 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயம் செய்யும், கட்டணத்தில், விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படும். வேளாண்துறையும், தோட்டக்கலைத்துறையும், இப்பணிகளை நேரடியாக கண்காணிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X