சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்சுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வியாபாரி பஸ்சை விட்டு இறக்கியதால் ஆத்திரம்

Added : பிப் 15, 2020
Advertisement

ராமநாதபுரம்:அரசு பஸ்சில் வெடிகுண்டு இருப்பதாக ராமநாதபுரம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த வெள்ளரிக்காய் வியா பாரியை பிடித்து போலீசார் விசாரிக் கின்றனர்.

காரைக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு வந்த அரசு பஸ் நேற்று பகல் 1:00 மணிக்கு ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் நின்றது. அப்போது வெள்ளரிக்காய் விற்பவர் பஸ்சில் ஏறி விற்பனை செய்தார். அவரை பஸ் டிரைவர் கண்டித்து இறக்கி விட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த அவர் உப்பூரில் இருந்து புறப்பட்டு வரும் அரசு பஸ்சில் வெடிகுண்டு இருப்பதாக எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தார்.

வெடிக்குண்டு கண்டறியும் பிரிவினர் சென்று தேவிப்பட்டினம் அருகே பஸ்சை நிறுத்தி
சோதனையிட்டனர்.கண்டக்டர், டிரைவரிடம் போலீசார் விசாரித்த போது, மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. டிரைவர் அளித்த தகவலின் பேரில் உப்பூர் பகுதியில் வெள்ளரிக்காய் வியாபாரிகளிடம் விசாரித்தனர்.அப்போது, தன்னை இறக்கிவிட்ட டிரைவர் மீதான ஆத்திரத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்ததாக வெள்ளரிக்காய் விற்பவர்தெரிவித்தார்.

எஸ்.பி., ராஜராஜன் கூறுகையில், ''வெள்ளரிக்காய் விற்பவரை டிரைவர் கண்டித்ததால் பஸ்சில் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளார். அவரிடம் விசாரணை நடக்கிறது. அவர்மீது ஏற்கனவே வழக்குகள் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X