தமிழ்நாடு

ஒருங்கிணைப்பு இல்லையே: முறையற்ற பணிகளால் தவிக்கும் மக்கள் :ஒருவர் மீது ஒருவர் பழி போடும் அவலம்

Added : பிப் 15, 2020
Advertisement

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளில் துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததால் ஒவ்வொரு துறையினரும் ஒருவர் மீது ஒருவர் பழி போட்டு தப்பும் சூழலால் பொது மக்கள்தான் பாதிப்பை சந்திக்கின்றனர்.

அரசின் பல்வேறு மேம்பாட்டு திட்ட பணிகள் தகுதியான நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை முறையாக செய்யாது ஒவ்வொரு துறையினரும் அடுத்தவர்களை குற்றம் சாட்டுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. இதற்கு முக்கிய காரணம் துறையினரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே .

குறிப்பாக ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகளில் பணிகள் நடந்து வருகின்றன. பாதாள சாக்கடை பணிகளின் போது குடிநீர் குழாய்கள் சேதம் தொடர் கதையாக உள்ளது. அத்துடன் இதில் வெளியேற்றப்படும் கழிவு மண் வாறுகால்களில் அடைபட்டு கழிவு நீர் வெளியேற
வழியில்லா சூழல் ஏற்பட்டு விடுகிறது.இதனால் கால்வாயில் செல்லும் கழிவுநீர் பெரும்பாலும் அந்தந்த பகுதியில் உள்ள காலி இடங்கள், நகரை சுற்றிய நீர்நிலைகளில் கலக்கிறது.

பல வார்டுகளில் கால்வாயில் ஏற்படும் அடைப்புகளால் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம்
வீசுகிறது.உடைபட்ட குடிநீர் குழாய்களால் குடிநீர் சப்ளை தாமதமாவதுடன் சரி செய்யும் வரை அதிகாரிகளை தேடி அலையவேண்டியுள்ளது.

ரோடுகளின் இடையே பள்ளங்கள் தோண்டும் போது குடிநீர், டெலிபோன் இணைப்பு, கழிவு நீர் குழாய்கள் சேதமாகிறது. இவற்றை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யார் என்ற விபரம் சரியாக தெரியாததுடன் ஒவ்வொரு துறையினரும் மற்றவர் மீது பழிகளை போட்டு செல்வதால் பொது மக்கள்தான் பாதிப்பை சந்திக்கின்றனர். இதற்கு ஓர் வழி காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மக்கள்தான் அலையுறாங்க



அனைத்து இடங்களிலும் நடைபெற்று வரும் பணிகளின் போது ஏற்படும் குறைகளால் பொது மக்கள் இன்னலுக்கு உள்ளாகின்றனர். வாரம் ஒரு முறை குடிநீர் குழாய் உடைப்புகளால் தேவையற்ற அலைச்சல் ஏற்படுகிறது. பல்வேறு பணிக்காக ரோட்டை தோண்டும் போதே அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து மேற்கொண்டால் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணலாம்.

இல்லாத சூழலில் பொது மக்கள் ஒவ்வொரு துறையினராக தேடி அலையும் சூழல் உள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்களை பொது மக்களுக்கு தெரியும் படி வைப்பதுடன், ரோடு தோண்டும் பணி முடிந்தவுடன் சமப்படுத்தும் பணிகளையும் முறையாக செய்ய அதிகாரிகளை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்.

-- ராமமூர்த்தி, தி.மு.க ., நகர் செயலாளர், ராஜபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X