கோயில் இடத்தில் அலுவலகம் கட்ட எதிர்ப்பு; முற்றுகை| Dinamalar

கோயில் இடத்தில் அலுவலகம் கட்ட எதிர்ப்பு; முற்றுகை

Added : பிப் 15, 2020
Share

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு கம்மாள கருப்பசுவாமி கோயிலை யொட்டி 2.90 ஏக்கர் நிலம் உள்ளது.

இதை கடந்த 80 ஆண்டுகளுக்கு ஒரு பிரிவினர் பட்டா பெற்று அனுபவித்து வருகின்றனர். அரசு கணக்கில் இது புறம்போக்கு நிலமாகவே உள்ளது. வத்திராயிருப்பில் புதிய தாலுகா அலுவலகம் அமைக்க இடம் ஆய்வு செய்தபோது இந்த இடத்தை வருவாய்த்துறையினர் அரசுக்கு பரிந்துரைத்தனர்.

அதன்படி ஒப்புதல் வழங்க பொதுப்பணி,வருவாய்த்துறை அதிகாரிகள் நில மண் மாதிரி எடுக்க மண் அள்ளும் இயந்திரத்துடன் சென்றனர். இதற்கு கோயில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதன்பின் வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தைம் முற்றுகையிட்டனர்.இன்ஸ்பெக்டர் செல்வம், தாசில்தார் ராஜா உசேன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீதிமன்றத்தில் முறையீடு செய்யஅறிவுரை கூற கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X