வழிப்பறி இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி இருவர் கைது

Added : பிப் 15, 2020
Share

அனுப்பர்பாளையம்:அவிநாசி, பச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.கடந்த 12ம் தேதி இரவு பணி முடிந்து, பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காளம்பாளையம் அருகே சென்றபோது, அங்கு வந்த இருவர் சதீஷ்குமாரை மறித்து கத்தியை காட்டி மிரட்டி தாக்கினர்.பின் அவரிடமிருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் 200 ரூபாயை பறித்து சென்றனர்.
பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட திருப்பூர் பூலுவப்பட்டி அம்மன் நகர் இரண்டாவது வீதியைச் சேர்ந்த சண்முகம், மகன் கோகுல் கிருஷ்ணன், 26, திருப்பூர் புதிய பஸ் நிலையம் காட்டன் மில் ரோடு இரண்டாவது வீதியைச் சேர்ந்த முரளி, 24, ஆகிய இருவரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றை மீட்டனர்.கோகுல் கிருஷ்ணன், மீது வழிப்பறி வழக்கு, பெருமாநல்லுாரில் இரண்டும், அவிநாசியில் ஒன்றும் உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X