சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி அம்பலம்

Added : பிப் 15, 2020
Advertisement

திருப்பூர்:கனரா வங்கியில் வேலை வாங்கி தருவதாக 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.தாராபுரம், தம்புரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி, 39. கொடுவாய் அருகிலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருடன் வேலை செய்த, திண்டுக்கல் அழகுபட்டியைச் சேர்ந்த ராஜா, அவரது உறவினர் பிரேம்குமார் இருவரும், கனரா வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.இதற்காக பல தவணையில், மொத்தம் 25 லட்சம் ரூபாய் இருவரும் வாங்கி உள்ளனர். இது தவிர சென்னை உள்ளிட்ட பல ஊர்களுக்கு சென்று, அதிகாரிகளை பார்க்க வேண்டுமென, ரத்தினசாமியை அழைத்து சென்றுள்ளனர்.ஆனால், நீண்ட நாளாகி யும், வேலை வாங்கி தரவில்லை. இருவரும் போன்களை ஸ்விட்ச்ஆப் செய்து விட்டு, தலைமறைவாகி விட்டனர். பல இடங்களில் விசாரித்த போது, இருவரும் இது போல் பலரிடம் பண மோசடி செய்தது தெரிந்தது.இதனால், அதிர்ச்சி அடைந்த ரத்தினசாமி நேற்று எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். புகார் மீது விசாரணை நடத்த, தாராபுரம் போலீசாருக்கு உத்தரவிப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X