பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Added : பிப் 15, 2020
Share

திருப்பூர்:பெண்ணை கழுத்தை நெரித்துக்கொண்ட, விவசாய கூலித்தொழிலாளிக்கு, ஆயுள் தண்டனை விதித்து, முதன்மை மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது.வேலுார் மாவட்டம், சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன், 31. விவசாய தொழிலாளி. வெள்ளகோவில் அடுத்த, பெரிய கிணத்துப்புதுாரில் உள்ள தோட்டத்தில், வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வேலை செய்த, சந்திரா, 40 என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.ஏற்கனவே திருமணமான சந்திரா குடும்பத்தினர், இதை கண்டித்துள்ளனர். அதற்கு பிறகு, சந்திரா சரியாக பேசாமல் இருந்ததால், விஸ்வநாதனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், 2018 ஆக., 13ல், தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த, சந்திராவை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.வழக்குப்பதிவு செய்த வெள்ளகோவில் போலீசார், விஸ்வநாதனை கைது செய்தார். இவ்வழக்கு, முதன்மை மாவட்ட கோர்ட்டில் வழக்கு நடந்தது. விசாரணை முடிந்து, மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி நேற்று, தீர்ப்பு வழங்கினார். கழுத்தை நெரித்து கொலை செய்த அவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X