பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் நிலங்களை மீட்டு பட்டா விருதுநகர் வாசிகள் வரவேற்பு

Added : பிப் 15, 2020
Share
Advertisement

தமிழக பட்ஜெட் குறித்து விருதுநகர் மாவட்டத்தினர் கூறிய கருத்துக்கள் இதோ:

காவிரி வெள்ளாறு இணைப்பு மகிழ்ச்சி

கஸ்துாரி, குடும்பத்தலைவி, ராஜபாளையம்: கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.பாசனத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, 8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள், விபத்து மற்றும் ஆயுள் காப்பீடுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு, காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட முதல் கட்டமாக காவிரி முதல் வெள்ளாறு வரை இணைப்பு கால்வாய் அறிவிப்பு நல்ல விஷயம். அனைத்து அரசு பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா, முதலமைச்சரின் பசுமை வீடு திட்டநிதி ரூ.2.10 லட்சமாக உயர்த்தப்படுவது பாராட்ட வேண்டியது.

அம்மா உணவகத்திற்கு புத்துயிர்

ராஜகுமாரி, குடும்பத்தலைவி, விருதுநகர்: கடன்சுமை கூடிக்கொண்டே போவது வேதனை அளிக்கிறதுஇந்துசமய அறநிலைய துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. துவண்டு வரும் அம்மா உணவகத்திற்கு ரூ.100 கோடி அளித்தது மீண்டும் அத்திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்தது போன்றுள்ளது. சுகாதாரத்துறைக்கு கூடுதலாக நிதியை ஒதுக்கியிருக்கலாம். வளர்ந்த தகவல் தொழில்நுட்பத்திற்கு ரூ.153 கோடி ஒதுக்கியது வருத்தமளிக்கிறது. நகராட்சி நிர்வாகங்களுக்கு ரூ.18,540 கோடி ஒதுக்கப்பட்டிந்தாலும் அதை முறையாக பயன்படுத்துவார்களா என்பது கேள்விக்குறியே.

ஏமாற்றம் தருகிறது

கே. எம்.விஜயகுமார், சாலை வட்டார போக்குவரத்து சங்கத் தலைவர், சாத்துார்: கல்விக்காக ரூ 34, 181 கோடி , வேளாண்மைத்துறைக்கு ரூ 11,894 கோடி ஒதுக்கியது வரவேற்கதக்கது. மதுக்கடைகள் எண்ணிக்கையை குறைக்கும் அறிவிப்பு இடம் பெறாதது ஏமாற்றம். புதிய வரி விதிக்கப்படாதது வரவேற்புக்குரியது. டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்ததை வரவேற்கிறோம். மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு செயல்பாட்டிற்கு வர வேண்டும்.பற்றாக்குறை பட்ஜெட் என்பதால் ஏமாற்றம் தருகிறது.

தொழில்துறைக்கு முக்கியத்துவம் இல்லை

ஜெய்சங்கர், தொழில்அதிபர், சிவகாசி: தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக ஜி.எஸ்.டி., பற்றி தொழில்துறைக்கு அரசு எந்த முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தொழில் வளர்ச்சிக்கு எந்தவித திட்டமும் இல்லை. தொழில்கள் வளர்ச்சியடைந்தால்தான் அரசின் கடன் சுமை குறையும். மின்சாரம், சுகாதாரம், விவசாயம், போக்குவரத்து, கால்நடை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முறையாக பயன்பாட்டிற்கு வர வேண்டும். 11 புதிய மருத்துவ கல்லுாரிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. நெல்லை கங்கைகொண்டானில் உணவு பூங்கா, வேளாண் மண்டலம் அமைத்தல் போன்ற அனைத்தும் திட்டத்தோடு நின்று விடாமல் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

நீர்பாசன ஒதுக்கீடு மகிழ்ச்சியே

பிச்சை முருகன், விவசாயி, ஸ்ரீவில்லிபுத்துார்: உழவர் உற்பத்தி கொள்கை, உழவர்- அதிகாரி திட்டம் பயனுள்ளதாக இருக்கும். கரும்பு விவசாயம் நுண்நீர் பாசன திட்டத்திற்கு ரூ. 75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இதை விவசாயிகளுக்கு எளிதாக சென்று சேரும்படி செய்தால் நன்று.உழவர் சந்தைகள், கூட்டுறவு நிறுவனங்கள் அதிகரிப்பதற்கான அறிவிப்பு, நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடுமகிழ்ச்சியே.நலிவடைந்த விவசாயிகளுக்காக இன்றும் நல்ல திட்டங்களை உருவாக்கி இருக்கலாம்.

-நமது நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X