சம்பவம் செய்தி

தமிழ்நாடு

13 வாகனம் பறிமுதல்; ஆர்.டி.ஓ., அதிரடி

Added : பிப் 15, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் குழு நடத்திய ஆய்வில், பர்மிட் இல்லாமல் இயங்கிய, 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர், ஆண்டிபாளையம் செக்போஸ்ட் அருகே, நேற்று தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த, பொக்லைன் இயந்திரத்தை நிறுத்தி ஆய்வு செய்த போது, மூன்று ஆண்டுகளாக பர்மிட் இல்லாமலும், தகுதி சான்று பெறாமலும், இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.வாகனத்தை பறிமுதல் செய்து, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், வாடகைக்கு இயக்கிய சொந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பயணிகளை ஏற்றிச்சென்ற, மூன்று ஆம்னி வேன், பதிவு செய்யாமல் சரக்கு ஏற்றிச்சென்ற புதிய ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில், 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X