பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாய்ப்பு ஏராளம் கருத்தரங்கில் தகவல்

Added : பிப் 15, 2020
Advertisement

திருப்பூர்:ஆடை உற்பத்தி நிறுவனங்களில், தர ஆய்வுப் பிரிவில் சிறந்த சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.முதலிபாளையம் நிப்ட்--டீ கல்லுாரியில், பேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட் துறை சார்பில், ஆடை தர ஆய்வு செய்முறைகள் தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் முன்னிலைவகித்தார்.டெக்ட்ரோ இந்தியா குழும தர கட்டுப்பாடு மேலாளர் முகமது யூனுஸ் பேசியதாவது:ஏற்றுமதி ஆடைகளின் தரம் மிக முக்கியமானதாக உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாட்டு இறக்குமதியாளர்களை பொருத்தவரை, பல்வேறுவகையான தர மதிப்பீடுகளை பின்பற்றுகின்றனர்.ஆடை தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும், வெவ்வேறு வகையான தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது; அவற்றை எளிதில் கண்டறியும் நுட்பங்களை அறிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.பெரும்பாலான மாணவர்கள் மெர்ச்சன்டைசிங் பிரிவில் வேலைக்குச் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். தர ஆய்வு பிரிவில், சிறந்த சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. தர ஆய்வுப் பிரிவில் வேலைக்குச் செல்ல விரும்புவோர், ஆடை உற்பத்தியில் ஏற்படும் குறைகள் குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்; இந்த பிரிவில், திறமையான, தகுதியானோர் தேவைப்படுகின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார்.பேஷன் அப்பேரல் மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.பேராசிரியர் வேல்மதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X