சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாய் குறுக்கே வந்ததால் கம்பத்தில் மோதிய கார்

Added : பிப் 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:ரோட்டின் குறுக்கே நாய் வந்ததால், நாய் மீது மோதாமல் இருக்க, இடதுபுறம் காரை ஒதுக்கியதில், மின் கம்பத்தின் மீது மோதியது.திருப்பூர் காங்கயம் ரோடு புதுப்பாளையத்தில் நேற்று காலை, ராக்கியாபாளையத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர், காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென குறுக்கே நாய் ஒன்று வந்தது. உடனே, டிரைவர் நாயின் மீது கார் மோதாமல் காப்பாற்ற முயன்றார். இதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. அதில், மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தது.காரில் வந்தவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். ரோட்டின் குறுக்கே விழுந்த மின்கம்பத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X