வெண்கல பதக்கம் வென்ற  குமுதா பள்ளி மாணவியர்

Added : பிப் 15, 2020
Advertisement

திருப்பூர்:இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், 65வது தேசிய அளவிலான 14 வயதுக்கு கையுந்து பந்து போட்டி, ஆந்திரா மாநிலம் நெல்லுாரில் நடந்தது.இதில், தமிழக அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடிய, குமுதா பள்ளி 8ம் வகுப்பு மாணவி அபி மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆர்த்தி இருவரும், தேசிய அளவில் மூன்றாமிடம் பிடித்து, வெண்கல பதக்கம், ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை பெற்றுள்ளனர்.பதக்கம் வென்ற மாணவியரை ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் பாராட்டி பரிசு வழங்கினார். குமுதா பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், இணை தாளாளர் சுகந்தி, செயலாளர் அரவிந்தன், இணை செயலாளர் மாலினி, முதல்வர் மஞ்சுளா, தலைமை ஆசிரியர் வசந்தி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X