குழந்தைகளுக்கு பாலியல் பாதுகாப்பு: பெற்றோருக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு பாலியல் பாதுகாப்பு: பெற்றோருக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்

Added : பிப் 15, 2020
Share

திருப்பூர்:ஒவ்வொரு குழந்தையையும் பாலியல் குற்றவாளிகளிடம் காப்பது எப்படி என்பது குறித்து பெற்றோருக்கு சமூக பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.சமூக பாதுகாப்பு துறை சார்பில், 'குழந்தைகளை பாதுகாப்போம், குழந்தைகளை பராமரிப்போம்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு நோட்டீஸ் பொது இடங்களில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதில், குழந்தைகளுக்கு நேரும் பாலியல் கொடுமை, குழந்தைகள் பாதுகாப்புக்கான யோசனைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன.'உங்கள் குழந்தை யாருடன், எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் எந்த விஷயத்தை பற்றியும் குழந்தைகள் பேசலாம் என்ற தன்னம்பிக்கையை உருவாக்குங்கள். தவறான தொடுதல் குறித்து புரியும் வகையில் சொல்லி கொடுக்க வேண்டும்.குழந்தை உங்களிடம் ஏதாவது சொல்ல வந்தால், பொறுமையாக என்னவென்று கேளுங்கள். உதவி தேவைப்பட்டால் தயக்கமின்றி போலீசார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் தெரிவியுங்கள். எந்நேரமும் சைல்டுலைன் 1098 உதவி எண்ணுக்கு அழைக்க தயங்காதீர்,' என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சமூக நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொதுமக்கள் அதிகளவில் கூடும் பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் என பொது இடங்களில், பாலியல் துன்புறுத்தல், அதிலிருந்து தப்பிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில், திருப்பூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X